Home
Gadgets

மிரளவிட்ட பிளிப்கார்ட்.. ரூ.13,299 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. பெசல்-லெஸ் பிரேம்.. 30W சவுண்ட்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் அப்ளையன்சஸ் போன்சா விற்பனையில் (Appliances Bonanza Sale) 43 இன்ச் டிவிகளுக்கு கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் கோடக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் டிவியானது நம்ப முடியாத பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த கோடக் டிவியில் 43 இன்ச் டிஸ்பிளே, பெசல்-லெஸ் பிரேம், 30W சவுண்ட் அவுட்புட் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்கள் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பிளிப்கார்ட் அப்ளையன்சஸ் போன்சா விற்பனையில் ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரையில் பல்வேறு டிவி மாடல்களுக்கு தள்ளுபடிகள் கொடுக்கப்படுகிறது. இதில் கோடக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் டிவிக்கு 39 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இப்போது ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. மேலும், பேங்க் தள்ளுபடி இருக்கிறது.

மிரளவிட்ட பிளிப்கார்ட்.. ரூ.13,299 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. மாடல் எது?

குறிப்பிட்ட பேங்க் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்தால் ரூ.700 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ ஆப்ஷன்களுக்கு அதிகபட்சம் ரூ.1,400 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.700 பேங்க் தள்ளுபடியை எடுத்து கொண்டாலும் ரூ.13,299 பட்ஜெட்டில் இந்த கோடக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் டிவியை வாங்கி கொள்ள முடியும். இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

கோடக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் டிவி அம்சங்கள் (KODAK Special Edition 43 inch TV Specifications): பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி குவாட் கோர் (Quad Core) சிப்செட் மற்றும் மாலி ஜி32 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. இந்த கோடக் டிவிக்கு 43 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் ஃபுல்எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஸ்மார்ட் டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், விவிட் கலர்கள், ஹையர் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS Trusurround) சப்போர்ட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

இதில் 30W சவுண்ட் அவுட்புட் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஆடியோ பக்காவாகவே இருக்கிறது. இந்த டிவிக்கு கோடக் லினக்ஸ் டிவி ஓஎஸ் (Kodak Linux TV OS) கிடைக்கிறது. இருப்பினும், பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), சோனிலிவ் (Sony LIV) போன்ற ஓடிடி ஆப்களை கொடுக்கிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது.

மேலும், கேம் மோட் (Game Mode), மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் கிடைக்கிறது. மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. அதேபோல வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி பீச்சர்களும் கொடுக்கப்படுகிறது.

இந்த கோடக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் டிவியானது பெசல்-லெஸ் டிசைனில் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்கள் பெரிதாக வேண்டாம். பெரிய டிஸ்பிளே டிவி கம்மியான விலைக்கு கிடைத்தால் போதும் என்று கேட்கும் டிவி பிரியர்கள் இந்த டிவியை வாங்கி கொள்ளலாம். அதே நேரத்தில் டிஸ்பிளே மற்றும் ஆடியே பீச்சர்கள் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கொடுக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
KODAK Special Edition 43 inch TV Available At Discounted Price in Flipkart Appliances Bonanza Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X