வீட்டுக்கு 1 தூக்குவீங்க.. வெறும் ரூ.13749 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 43-இன்ச் கோடாக் (KODAK) ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது 43-இன்ச் கோடாக் (KODAK) ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 மாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை வெறும் ரூ.13749 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைப் பார்க்கலாம்.

கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 அம்சங்கள் (KODAK Smart Linux TV 2024 Edition specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது. மேலும் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
அதேபோல் விவிட் கலர்ஸ் (vivid colors), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle)மற்றும் சிறந்த காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
தரமான குவாட்-கோர்(Quad-cord) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 மாடல். இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவியில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக லீனக்ஸ் (Linux) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி சரவுண்ட் சவுண்ட் (Surround Sound)அம்சத்தைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அம்சம் கிடைக்கும். மேலும் இந்த டிவியில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன. பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஹெட்போன் ஜாக்,மிராகாஸ்ட் (Miracast), வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 43-இன்ச் டிவியில் உள்ளன.எனவே பல்வேறு சாதனங்களை இந்த டிவியில் கனெக்ட் செய்ய முடியும். அதேபோல் கோடாக் நிறுவனம் விரைவில் பல அசத்தலான டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








