ரூ.6,499 முதல்... மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான கோடக் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 3 புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது கோடக் நிறுவனம்.
அதாவது கோடக் எஸ்இ சீரிஸ் 24-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கோடக் எஸ்இ சீரிஸ் 24-இன்ச் டிவி ஆனது எச்டி ரெடி (720 பிக்சல்ஸ்) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதன் 32-இன்ச் டிவி மாடல் எச்டி ரெடி ((720 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவும், இதன் 40-இன்ச் டிவி மாடல் ஃபுல் எச்டி (1080 பிக்சல்ஸ்) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த மூன்று டிவிகளும் பெசல்-லெஸ் ஸ்கிரீன் ஆதரவைக் கொண்டுள்ளன.
கோடக் எஸ்இ சீரிஸ் 24-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன இந்த புதிய கோடக் எஸ்இ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். பின்பு கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடக் எஸ்இ சீரிஸ் 24-இன்ச் ஆனது 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு கோடக் எஸ்இ சீரிஸ் 32-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளன. இதுதவிர டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் TruSurroundஆதரவு கொண்டுள்ளன இந்த புதிய கோடக் எஸ்இ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
பிரைம் வீடியோ, சோனி லிவ், யூடியூப், Zee5 உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவிகள் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளன. மிராகாஸ்ட், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், எச்டிஎம்ஐ 3, ஏஆர்சி/சிஇசி (ARC/CEC), புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

கோடக் எஸ்இ சீரிஸ் 24-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.6,499-ஆக உள்ளது. பின்பு இதன் 32-இன்ச் டிவி மாடல் ரூ.9,499-விலையிலும், இதன் 40-இன்ச் டிவி ரூ.15,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (மே 4, 2023) அமேசான் தளத்தில் இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








