Home
Gadgets

அள்ளி தந்த அமேசான்.. 40W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43 இன்ச் 4கே QLED டிவி.. எந்த மாடல்?

கோடாக் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கோடாக் நிறுவனத்தின் 43 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் கோடாக் கியூஎல்இடி எஸ்இ 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் (Kodak QLED SE 43 inch Full HD Smart Linux TV 2025 Edition) மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைவான விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி தந்த அமேசான்.. ஆஃபரில் 43 இன்ச் 4கே QLED டிவி.. எந்த மாடல்?

கோடாக் கியூஎல்இடி எஸ்இ 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (KODAK QLED SE 43 inch Smart Linux TV Specifications): 43 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) மற்றும் குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

40W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 பாட்டம் பயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speakers) உடன் கோடாக் கியூஎல்இடி எஸ்இ 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாடலுக்கு சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) டெக்னாலஜி கிடைத்துள்ளது. பின்பு இந்த டிவியில் ஏஆர்சி (ARC) மற்றும் பிடிஐஎப் (PDIF) வருகிறது.

512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரியை கொடுத்துள்ளது கோடாக் கியூஎல்இடி எஸ்இ 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி. பின்பு இதில் வெப் பிரவுசர் (Web Browser) சப்போர்ட் உள்ளது. இதுதவிர ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) ஆதரவு இந்த டிவியில் கிடைக்கிறது.

குறிப்பாக பெசல் லெஸ் டிசைன் (Bezel Less Design)உடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது. பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (Zee5) போன்ற பல ஒடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

லினக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் போல ஓடிடி ஆப்கள், ஸ்கிரீன் மிரரிங் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த டிவியில் கிடைக்கும். 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஆப்டிகல், ஏவி இன் போர்ட், பில்ட் இன் வை-பை (Buit-in Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), மிராகாஸ்ட் (Miracast) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Kodak QLED SE 43 inch Smart Linux TV 2025 is available at 28 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X