பழைய TV-க்கு பொங்க வச்சாச்சு.. ரூ.11,748 க்கு 40 இன்ச் QLED டிவி.. 36W சவுண்ட்.. Linux TV ஓஎஸ்.. எந்த மாடல்?
கோடாக் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் கியூஎல்இடி டிவிகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் 27 சதவீத தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் டிவியின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 27 சதவீத தள்ளுபடி போக கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் (KODAK QLED SE 40 inch Smart Linux TV 2025 Edition) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,748 விலைக்கு இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.

கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (KODAK QLED SE 40 inch Smart Linux TV Specifications): 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த கோடாக் டிவி கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் புல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. எச்டிஆர் (HDR) கொடுத்துள்ளது.
டைனாமிக் கிரிஸ்டல் கலர் (Dynamic Crystal Color) மற்றும் 100 சதவீத கலர் வால்யூம் (Color Volume) கொண்டுள்ளது. 36 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 பாட்டம் பயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speakers) கிடைத்துள்ளன. சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) டெக்னாலஜி கிடைத்துள்ளது. மேலும், டிவி ஸ்பீக்கர் (TV Speaker), ஏஆர்சி (ARC) மற்றும் பிடிஐஎப் (PDIF) வருகிறது.
ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ35 (ARM Cortex A35) சிப்செட்டை இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொண்டுள்ளது. மேலும், மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரியை கொடுத்துள்ளது. வெப் பிரவுசர் (Web Browser) சப்போர்ட் உள்ளது. ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) கிடைக்கிறது.
பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 (Zee5) ஓடிடி சந்தா கிடைக்கின்றன. பெசல் லெஸ் டிசைன் (Bezel Less Design) கிடைத்துள்ளது. லினக்ஸ் ஓஎஸ் கிடைத்தாலும், ஓடிடி ஆப்கள், ஸ்கிரீன் மிரரிங் போன்ற ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மாடல்களில் கிடைப்பதை போல இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் டிவியிலும் கிடைக்கிறது.
2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைத்துள்ளது. மேலும், ஆப்டிகல், ஏவி இன் போர்ட்களும் இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவியில் வருகிறது. பில்ட் இன் வை-பை (Buit-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டியை கொடுக்கிறது.
மேலும், மிராகாஸ்ட் (Miracast) கனெக்டிவிட்டியை இந்த டிவி கொண்டுள்ளது. 40QSE5009 மாடல் மற்றும் கியூஎல்இடி எஸ்இ சீரிஸ் கீழ் இந்த கோடாக் கியூஎல்இடி எஸ்இ 40 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் மற்றும் பிளாக் கலருடன் கிடைக்கிறது. 2025 எடிஷனாக விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








