Home
Gadgets

Kodak மலிவு விலையில் அறிமுகம் புதிய செய்த QLED டிவிகள்.. டால்பி டிஜிட்டல் பிளஸ்.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

கோடாக் நிறுவனம் இந்தியாவில் கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி (Kodak Matrix QLED Google 5.0 TV) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதவது 32 இன்ச், 40 இன்ச், 43 இன்ச் என மூன்று மாடல்களில் இந்த புதிய டிவி வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி அம்சங்கள் (Kodak Matrix QLED Google 5.0 TV Specifications): இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடாக் ஸ்மார்ட் டிவிகள் கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. அதேபோல் விவிட் கலர்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), 16.7 மில்லியன் கலர்ஸ், 350 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய கோடாக் டிவிகள்.

Kodak மலிவு விலையில் அறிமுகம் புதிய செய்த QLED டிவிகள்.. எந்த மாடல்?

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளன இந்த புதிய கோடாக் ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதுவும் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.

தரமான ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ55 குவாட் கோர் பிராசஸர் உடன் கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி மாடல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவிகளில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தை (Google TV 5.0 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த கோடாக் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவேகூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். அதேபோல் கூகுள் குரோம்ஸ் காஸ்ட் ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளது.

10,000-க்கும் மேற்பட்ட ஆப்கள் மற்றும் கேமிங் ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) மற்றும் சரவுண்ட் சவுண்ட் ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் இந்த புதிய கோடாக் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த புதிய டிவிகளில் உள்ளன.

Kodak மலிவு விலையில் அறிமுகம் புதிய செய்த QLED டிவிகள்.. எந்த மாடல்?

புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டிவிகளில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும். இதில் ஓடிடி தளங்களின் ஷாரட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுகளும் உள்ளன.

கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி விலை
கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி 32 இன்ச் மாடலின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி 40 இன்ச் மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
கோடாக் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி கூகுள் 5.0 டிவி 43 இன்ச் மாடலின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
தற்போது இந்த டிவி பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Kodak Matrix QLED Google 5.0 TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X