Just In
- 7 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 8 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 9 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 10 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தரமான அம்சங்களுடன் வெளிவந்த கோடாக் சிஏ ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவி: முழு விவரம்.!
கோடாக் நிறுவனத்தின் கோடாக் சிஏ ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மிகவும் மெலிதாகவும், சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது கோடாக் சிஏ ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஸ்மார்ட் டிவி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்
டிவி மாடல் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

கோடாக் சிஏ ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.குறிப்பாக இந்த இயங்குதளம் மிகவும் வேகமானது மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலும் பிளே ஸ்டோரில் இருந்து எல்லா ஆப் வசதிகளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
பிப்ரவரியில் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறையா? ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், நெட் பேங்கிங் செயல்படுமா?

ஸ்ட்ரீமிங்கிற்காக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஓவர்-தி-டாப் (OTT) ஆப்ஸ்கள் இதில் உள்ளது. அதாவது இந்தஸ்மார்ட் டிவியில் Netflix, Disney+ Hotstar மற்றும் பல தளங்களை எளிமையாக பயன்படுத்த முடியும். இதுதவிர உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. இது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள உள்ளடக்கத்தை நேரடியாக உங்கள் டிவியில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.
ஜியோ வழங்கும் இந்த ஹெவி டேட்டா திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? விலை கூட இவ்வளவு தானா?

நல்ல ரிமோட் இல்லாமல், டிவி பார்க்கும் அனுபவம் எந்த நபருக்கும் மோசமடையும். ஆனால், Kodak CA PRO 43-இன்ச் UHD ஆண்ட்ராய்டு டிவியுடன் இவ்வளவு ஸ்டைலான ரிமோட்டை வழங்கியதற்காக நாம் கோடாக்கைப் பாராட்ட வேண்டும். அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் ப்ளே ஆகியவற்றிற்கான நான்கு பிரத்யேக பட்டன்களை கொண்டுள்ளது இதன் ரிமோட். மேலும் ரிமோட்டில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றரை வயசு குழந்தை 1.4 லட்சத்திற்கு ஆன்லைன் ஆர்டர் செய்த சம்பவம்.. என்ன ஆர்டர் செய்தார் தெரியுமா?

2 யுஎஸ்பி ஏ-போர்ட், 3 எச்டிஎம்ஐ போர்ட், ஆர்எஃப் போர்ட், ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர டால்பி MS 12 மற்றும் DTS Trusurround ஆதரவு கொண்ட 40 வாட் ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக கோடாக் சிஏ ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999