புது ஸ்மார்ட் டிவி வாங்க திட்டம் இருக்கா? அப்போ இதுதான் நல்ல சான்ஸ்.. ரூ.7,999 முதல் புது டிவி..

|

புது வருடத்தில் புது ஸ்மார்ட் டிவி வாங்க திட்டம் இருக்கிறதா? அப்படியானால், அடுத்த நான்கு நாட்கள் நடைபெறும் ஸ்மார்ட் டிவி ஸ்பெஷல் விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க. ரூ.7,999 என்ற விலை முதல் புதிய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கான வாய்ப்பை கோடக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. எந்த மாடல் டிவிகள், என்ன இன்ச் வேறுபாட்டில்? என்ன விலையில் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

கோடக் CA தொடர் டிவிக்கள்

கோடக் CA தொடர் டிவிக்கள்

கோடக் டிவிக்களின் CA தொடர் வரிசையில் வரும் டிவிகள் பெசல் லெஸ் டிவிகளாகும், இவை டால்பி விஷன், 4K எச்டிஆர் 10, ஆண்ட்ராய்டு 10 இன்டர்ஃபேஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ் வித் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், யூ.எஸ்.பி 3.0 உடன் பல இணைப்பு விருப்பங்கள், எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி / சி.இ.சி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. எளிமையான ரிமோட் உடன் புளூடூத் v.5.0 அம்சம் மற்றும் கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

ஸ்மார்ட் டிவிகளின் ஸ்டோரேஜ் தகவல்

ஸ்மார்ட் டிவிகளின் ஸ்டோரேஜ் தகவல்

7XPRO டிவி தொடர் ஆகஸ்டில் கூகிளின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு கூட்டாளராக அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அண்ட்ராய்டு 9 பை மூலம் இவை இயங்குகிறது. இது குவாட் கோர் ARM Cortex-A53 சிபியு மற்றும் Mali-450MP3 உடன் வருகிறது. 32HDX7XPRO, 40FHDX7XPRO, மற்றும் 43FHDX7XPRO ஆகிய டிவிகள் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன, 4K மாடல்கள் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றது.

ரூ. 6,888 விலையில் பெண்களை மையமாக வைத்து வெளியான ஸ்மார்ட்போன்.. இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு?

நான்கு நாட்களுக்கு மட்டுமே விற்பனை

நான்கு நாட்களுக்கு மட்டுமே விற்பனை

பிளிப்கார்ட் உடன் கோடக் நிறுவனம் கூட்டு சேர்ந்து 26/12/2020 முதல் துவங்கி 30/12/2020 வரை நடக்கும் 4 நாட்கள் சிறப்பு எலக்ட்ரானிக் விற்பனையில் 24HDX100S டிவி மாடல் ரூ. 7,999, 32HDX900s டிவி மாடல் ரூ. 11,399 என்ற விலையிலும், 32HDX7XPRO டிவி மாடல் ரூ. 12,999 விலையிலும், 40FHDX7XPRO டிவி மாடல் ரூ. 16,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Kodak 65' இன்ச் ஸ்மார்ட் டிவி என்ன விலை தெரியுமா?

Kodak 65' இன்ச் ஸ்மார்ட் டிவி என்ன விலை தெரியுமா?

Kodak 43FHDX7XPRO டிவி ரூ. 21,499 என்ற விலையிலும், 43UHDX7XPRO டிவி மாடல் ரூ. 22,499 என்ற விலையிலும், 43CA2022 டிவி மாடல் ரூ. 24,499 என்ற விலையிலும், 50CA7077 டிவி மாடல் ரூ. 30,499, 55UHDX7XPRO டிவி மாடல் ரூ. 34,499, 55CA0909 டிவி மாடல் ரூ. 35,499 மற்றும் 65CA0101 டிவி மாடல் ரூ. 49,499 என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய மாடல் இது தானா? 'ஒன்பிளஸ் 9 லைட்' என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கால விற்பனை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கால விற்பனை

இந்த விற்பனையைப் பற்றி பேசுகையில், கோடக் பிராண்ட் உரிமதாரரான சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவ்னீத் சிங் மர்வா, "இது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தின் சலுகையாகும், இதன் மூலம் 2020 ஆண்டை ஒரு உயர் குறிப்பில் முடிக்க இலக்கு வைத்துள்ளோம். இந்த ஒப்பந்தங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சிறந்த டிவிகளை வழங்க உதவும் என்று கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kodak CA and 7XPRO series starting sales between 26th and 30th December 2020 at Rs 7999 only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X