இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி.. ஆண்ட்ராய்டு OS.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 50 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த 50 இன்ச் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 50UHDX7XPRO என்ற மாடல் நம்பர் கொண்ட கோடாக் 7எக்ஸ் ப்ரோ சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு (KODAK 7XPRO Series 50 inch Ultra HD 4K Smart Android TV) 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

கோடாக் 7எக்ஸ் ப்ரோ சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Kodak 7XPRO 50 inch 4K Smart TV Specifications): இந்த கோடாக் 7எக்ஸ் ப்ரோ சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது 50 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மாலி-450 எம்பி3 ஜிபியு (Mali-450 MP3 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த டிவியில் வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கோடாக் 7எக்ஸ் ப்ரோ சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் எச்டிஆர் 10 ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் உடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது.
மேலும் சோனி லிவ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். பின்பு 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது கோடாக் 7எக்ஸ் ப்ரோ சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் பிளே ஸ்டோர், ஏர்பிளே உள்ளிட்ட பல அம்சங்களை இந்த கோடாக் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்.


Click it and Unblock the Notifications