இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. 8GB ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் 4K டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் நவம்பர் 11-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்க முடியும்.
அதாவது முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், டேப்லெட், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் பிரபல நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43UHDX7XPRO) மாடலுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.28,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த கோடாக் 4கே டிவியை ரூ.16,999 விலையில் வாங்கலாம்.
மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் (KODAK 7X Pro Ultra HD (4K) LED Smart Android TV) அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

அதேபோல் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 (ARM Cortex-A53) பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் 4கே எச்டிஆர் 10 ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் உடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது.

இதுதவிர சோனி லிவ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். பின்பு 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications