Home
Gadgets

ஹோம் தியேட்டர் கதை முடிந்தது.. 6 ஸ்பீக்கர்கள்.. 2 வூப்பர்கள்.. 65 இன்ச் QD டிவி.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் கிடைக்கும் ஹோம் தியேட்டர்களை தூக்கி சாப்பிடும்படி 6 ஸ்பீக்கர்கள், 2 வூப்பர்கள் மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ சிஸ்டம் கொண்ட மாடலாக கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவி (Kodak 65 inch Mini QD 4K TV) அறிமுகமாகி இருக்கிறது. மேலும், டால்பி விஷன், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களிலும் மிரளவிடும்படி இருக்கிறது. இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவியின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மற்ற ஸ்மார்ட் டிவி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கோடாக் நிறுவனமானது, மலிவான விலைக்கு பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது. 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவி மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவி மொத்த மார்கெட்டையும் மிரளவிடும்படி ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது.

ஹோம் தியேட்டர் கதை முடிந்தது.. 6 ஸ்பீக்கர்கள்.. 2 வூப்பர்கள்.. மாடல்?

கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவி அம்சங்கள் (Kodak 65 inch Mini QD 4K TV Specifications): 65 இன்ச் மினி கியூடி 4கே டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. பெசல்-லெஸ் டிசைனில் அல்ட்ரா எச்டி 4கே ரெசொலூஷன் கொண்டுள்ளது. 1.1 பில்லியன் கலர் டெப்த் மற்றும் அல்ட்ரா வைடு காலர் காமட் கிடைத்துள்ளது. ஆகவே, கலர் அக்யூரசி மற்றும் நேச்சுரல் டோன் எதிர்பார்க்கலாம்.

மேலும், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவிக்கு கிடைக்கிறது. எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மீடியாடெக் ப்ராசஸர் (MediaTek Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவி இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கொடுக்கப்பட்டு உள்ளது. குரோம்காஸ்ட் மட்டுமல்லாமல், ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 65 இன்ச் டிஸ்பிளேவுக்கு ஏற்ப பிரீமியம் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, 108W ஆடியோ அவுட்புட் மட்டுமல்லாமல், 6 ஸ்பீக்கர்களை கொடுத்து உள்ளது. கூடுதலாக 2 சப்-வூப்பர்கள் கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட ஹோம் தியேட்டர் கொண்ட டிவி மாடலாகவே இந்த கோடாக் 65 இன்ச் மினி கியூடி 4கே டிவி இருக்கிறது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), டூயல்-பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ரூ.54,999 விலையில் கிடைக்க உள்ளது. ரூ.3,000 தள்ளுபடி போக அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Kodak 65 inch Mini QD 4K TV With Dolby Atmos Launched in India At Rs 54999 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X