இந்தியா: அசத்தலான கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவியில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்சமயம் கோடக் நிறுவனம் அசத்தலான 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கோடக் ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த கோடக் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

பிக்சல்:
தற்சமயம் வெளிவந்துள்ள இந்த கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் 3840 x 2160 பிக்சல் தீர்மானம் மற்றும்ஏபிளஸ் டிஸ்பிளே பேனல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைனமிக் ரேஞ்ச்:
இந்த டிவி மாடலில் இடம்பெற்றுள்ள ஹை டைனமிக் ரேஞ்ச் (எச்டிஆர்) ஆனது சிறந்த காட்சி அனுபவத்திற்கும் மற்றும் தெளிவான வண்ணங்களை வழங்கவும் உதவுகிறது. மேலும் ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்த
முடியம்.

டூயல்-கோர்:
கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவியில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு
கோடக் யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது, அதன்பின்பு Aptoide டிவி ஆப் ஸ்டோரில் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும். மேலும் இசைஇ திரைப்படம் மற்றும் விளையாட்டு போன்றவைக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

ஸ்பீக்கர்:
இந்த ஸ்மார்ட் டிவியில் லேன் இணைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் மொபைல் சாதனங்களை கோடக் ஸ்மார்ட் டிவியில் திரையிடவும் முடியும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. ஆடியோ அடிப்படையில், கோடக் டிவி 2 10W ஸ்பீக்கர்களில் வருகிறது.


விலை:
கோடக் 50-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவியில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.34,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications