வீடே தியேட்டர் தான்.. கூகுள் டிவி OS.. கம்மி பட்ஜெட்டில் புது 4K QLED டிவிகள் அறிமுகம்.. எந்த மாடல்?
கோடாக் (Kodak) நிறுவனம் தனது புதிய 4கே கியூஎல்இடி கூகுள் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் என நான்கு மாடல்களில் இந்த டிவிகளை வாங்க முடியும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகளின் அம்சங்கள் (Kodak 4K QLED Google TV Specifications): பெசல் லெஸ் டிசைன் மற்றும் 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய கோடாக் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் AI PQ சிப்செட் வசதியுடன் இந்த புதிய கோடாக் டிவிகள் வெளிவந்துள்ளன. இதுதவிர குவாட் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் வசதியும் இந்த கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகளில் உள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் புதிய கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த கோடாக் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), குரோம்காஸ்ட் (Chromecast), ஏர்பிளே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன.
ஏஐ ஸ்மூத் மோஷன் (AI Smooth Motion) ஆதரவு இந்த புதிய டிவிகளில் உள்ளன. இதன் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். பின்பு இந்த டிவிகளுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும். அதாவது வாயஸ் அசிஸ்ட்ண்ட் ஆதரவு மற்றும் ஓடிடி தளங்களின் ஷாரட்கட் பட்டன்கள் கொண்ட ரிமோட் ஆதரவு உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround)போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட 60W ஸ்பீக்கர்கள் உடன் கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.
மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகள் வெளிவந்துள்ளன.
கோடாக் 4கே கியூஎல்இடி கூகுள் டிவிகளின் விலை
கோடாக் 65-இன்ச் 4கே கியூஎல்இடி டிவியின் விலை ரூ.37,999-ஆக உள்ளது.
கோடாக் 55-இன்ச் 4கே கியூஎல்இடி டிவியின் விலை ரூ.27,649-ஆக உள்ளது.
கோடாக் 50-இன்ச் 4கே கியூஎல்இடி டிவியின் விலை ரூ.23,999-ஆக உள்ளது.
கோடாக் 43-இன்ச் 4கே கியூஎல்இடி டிவியின் விலை ரூ.18,799-ஆக உள்ளது.
செப்டம்பர் 23-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவிகள் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








