Home
Gadgets

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.18999-க்கு QLED டிவி.. 43 இன்ச் டிஸ்பிளே.. 40W டால்பி ஆடியோ.. 8GB மெமரி.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த டிவி பிரியர்களும் வீட்டுக்கு 2 ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 40W டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ, 2 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் ஜியோடெலி ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் கோடாக் 43 இன்ச் கியூஎல்இடி டிவி (Kodak 43 inch QLED TV) வெளியாகி இருக்கிறது. ஜியோடெலி ஓஎஸ் கிடைப்பதால், 400+ டிவி சேனல்கள், 300+ ஜியோ கேம்கள் இலவசமாக கிடைக்கின்றன. இதுகுறித்த விவரங்கள் இதோ.

கோடாக் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து இந்த ஜியோடெலி ஓஎஸ் கொண்ட 43 இன்ச் கியூஎல்இடி டிவி மாடலை இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றன. இது வழக்கமாக கிடைக்கும் பீச்சர்களுடன் கூடுதலாக டிவி சேனல்கள் மற்றும் கேம்களை கொடுக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட், பிரீமியம் ஓடிடி ஆப்கள் போன்ற ஆண்ட்ராய்டு டிவி பீச்சர்களையும் கொடுக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.18999-க்கு QLED டிவி.. 43 இன்ச் டிஸ்பிளே!

கோடாக் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Kodak 43 inch QLED TV Specifications): இந்த கோடாக் டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K ரெசொலூஷன் கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் காட்டுகிறது. ஜியோடெலி ஓஸ் (JioTele OS) கிடைக்கிறது.

அதேபோல ஆம்லாஜிக் (Amlogic) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மற்றும் யுஐ பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கொடுக்கும். ஜியோடெலி ஓஎஸ் கிடைத்தாலும், இந்த கோடாக் டிவிக்கு கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. ரிமோட்டிலும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது.

அதேபோல பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, எச்பிஓ, யூடியூப் போன்ற முக்கிய ஓடிடி ஆப்கள் அனைத்தும் கிடைக்கின்றன. மற்ற ஆப்களுக்கு கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடயோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளேவுக்கு ரிமோட்டில் ஹாட்-கீஸ் உள்ளது.

ஜியோடெலி ஓஎஸ் மூலம் 400+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 300+ ஜியோ கேம்கள் கொடுக்கப்படுறது. இவை ஜியோடிவி (JioTV) மற்றம் ஜியோகேம்ஸ் (JioGames) மூலம் அனுக கிடைக்கின்றன. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கொண்ட 40W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்களில் இந்த அவுட்புட் பெற்று கொள்ளலாம்.

இந்த கோடாக் 43 இன்ச் கியூஎல்இடி டிவியின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 ஆடியோ ஜாக் கிடைக்கிறது. மிராகாஸ்ட் (Miracast), மல்டிலிங்குவல் வாய்ஸ் சர்ச்ச் (Multilingual Voice Search) போன்ற ஸ்மார்ட் பீச்சர்களும் கிடைக்கின்றன.

இதுவொரு KQ43JTV0010 மாடலாகும். ஜியோடெலி சீரிஸின் கீழ் கிடைக்கிறது. ரூ.18,990ஆக விலை இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டியில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாக் (Black) கலரில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். இந்த பட்ஜெட்டுக்கு 43 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே கிடைப்பது கஸ்டமர்களை கவரக்கூடியதாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Kodak 43 inch QLED TV With JioTele OS Sale Under Rs 19000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X