வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Kenstar 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் கென்ஸ்டார் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி (Kenstar 43 inch 4K Smart Tizen TV 2025) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 8ஜிபி மெமரி, டால்பி ஆடியோ, எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது கென்ஸ்டார் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் கென்ஸ்டார் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்க்படப்டு ரூ.19,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும் . எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

கென்ஸ்டார் 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Kenstar 43 inch 4K Smart Tizen TV 2025 Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் கென்ஸ்டார் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடல் வெளிவந்தது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10), 300 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
பெசல் லெஸ் (bezel-less) உடன் கென்ஸ்டார் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஏஐ அப்ஸ்கேலிங் ( AI Upscaling) ஆதரவு கொண்டுள்ளது இந்த கென்ஸ்டார் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டைஸன் 7.0 இயங்குளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கென்ஸ்டார் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மகவும் அருமையாக இருக்கும். பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
பிக்ஸ்பை (Bixby) வாயஸ் அசிஸ்டண்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கென்ஸ்டார் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடல். குவாட் கோர் (QUAD Core) பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. அதுவும் இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கென்ஸ்டார் நிறுவனம்.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஏவி, ஆப்டிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கென்ஸ்டார் 43 இன்ச் 4கே டிவி மாடலில் உள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த டிவியுடன் வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








