இக்கட்டான சூழ்நிலை- வீட்டார் உடல்நிலை முக்கியம்: வீட்டில் இருக்கவேண்டிய உடல்நிலை ஆரோக்கிய கண்காணிப்பு கருவிகள்

|

உங்களது உடல்நிலை ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் வழங்கும் தகவலைவிட வேறுயாரும் துல்லியமாக வழங்கிவிட முடியாது. இருந்தாலும் அவ்வப்போது நமது உடல்நிலையை கண்காணிப்பதற்கான எளியரக கருவிகள் வீட்டில் இருப்பது என்பது மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும். எளிதாக கையாளும் உடல்நல ஆரோக்கிய கண்காணிப்பு கருவிகளை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அவ்வப்போது பெற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உடல்நலம் பேணிகாக்க முடியும். அதேபோல் இந்த கருவிகள் மூலம் திடீரென ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிவதன் மூலம் உடனடி மருத்துவத்திற்கும் உதவியாக இருக்கும். இரத்த அழுத்தம், இரத்த ஆக்ஸிஜன் அளவு, சுவாச வீதம், துடிப்பு வீதம் உள்ளிட்ட பிற உயிரணுக்கள் கண்காணிப்பு என்பதற்கு இந்த குறைந்த விலை கேஜெட்கள் உதவியாக இருக்கும்.

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள் ஆலோசனை

அதேபோல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு என மருத்துவ கேஜெட்களை வாங்கத் திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் உடல்நல ஆரோக்கிய கருவிகள் வாங்கினாலோ அதன் பயன்பாட்டை முழுமையாக படிப்பதோடு மட்டுமல்லாமல் மருத்தவர்கள் ஆலோசனை என்பது முக்கியம் என பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் எந்த ஒரு பிராண்ட்களையும் விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தகவல் பரிந்துரைக்கப்படவில்லை வாசகர்களின் நலன் கருதியே இந்த தகவல். இதில் காண்பிக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் புகைப்பட அடையாளத்திற்கே., தாங்கள் கருவிகளின் முழு தரத்தை ஆராய்ந்து வாங்குவது சிறந்த தேர்வாகும். இது முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையே எந்தவொரு உடல்நல ஆரோக்கியம் குறித்த தகவல்களை மருத்துவர்களை அணுகவதே சிறந்த முறையாகும். சில சாதனங்கள் இதய துடிப்பு உள்ளிட்டவற்றை சார்ந்து இருப்பதால் எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி பயன்முறை கண்டறிந்து பயன்படுத்தவும். வீட்டில் வைத்திருக்க வேண்டிய உடல்நல ஆரோக்கிய கண்காணிப்பு கருவிகள் குறித்து பார்க்கலாம்.

இதய ஆரோக்கிய கண்காணிப்பு கருவி (அடையாள புகைப்படம்)

இதய ஆரோக்கிய கண்காணிப்பு கருவி (அடையாள புகைப்படம்)

சிறிய தனிப்பட்ட இசிஜி மானிட்டர் ஸ்மார்ட்போன் துணை பயன்பாடு மூலம் மேற்கொள்ளப்படும் கருவியாகும். இந்த போர்ட்டபிள் தனிப்பட்ட இசிஜி மானிட்டர் அடிப்படையில் அதிக தொந்தரவு இல்லாமல் கண்காணிப்பை பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே எவ்வித முறைகேடுகளை தீர்மானித்து மருத்துவர்களுக்கு இந்த பதிவுகளை முக்கிய தகவலை வழங்க அனுமதிக்கிறது. போர்ட்டபிள் தனிப்பட்ட இசிஜி மானிட்டர் குறித்த பரிந்துரைகளை மருத்துவர்களிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்த கண்காணிப்பு: தானியங்கி மின்னணு இரத்த அழுத்த மானிட்டர் (அடையாள புகைப்படம்)

இரத்த அழுத்த கண்காணிப்பு: தானியங்கி மின்னணு இரத்த அழுத்த மானிட்டர் (அடையாள புகைப்படம்)

தானியங்கி மின்னணு இரத்த அழுத்த மானிட்டர் வைத்திருப்பது என்பது அத்தியாவசிய ஜேஜெட்டாக இருக்கிறது. துடிப்பு வீதத்தை காட்டும் சாதனமாக இது இருக்கிறது. இரத்த அழுத்த கண்காணிப்பு குறித்த பரிந்துரைகளுக்கு மருத்துவ நிபுணர்களை அணுகலாம்.

இரத்த ஆக்ஜிஜன் அளவைக் கண்காணிக்கும் விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டர் (அடையாள புகைப்படம்)

இரத்த ஆக்ஜிஜன் அளவைக் கண்காணிக்கும் விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டர் (அடையாள புகைப்படம்)

இந்த சாதனத்தை பெரும்பாலானோர் பார்த்திருப்போம். விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டர் சாதனமானது உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் ஓட்டத்தின் அளவை சுவாச வீதத்துடன் அளவிடுகிறது. இந்த சாதனம் சிறிய மற்றும் மலிவு விலை ஆகும். இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு ஆள்காட்டி விரலில் இதை செருக வேண்டும். மேலும் ஆக்ஸிமீட்டர் குறித்த பரிந்துரைகளுக்கு மருத்துவரை அணுகலாம்.

இரத்த குளுக்கோஸ் கண்காணிக்கும் குளுக்கோமீட்டர் (அடையாள புகைப்படம்)

இரத்த குளுக்கோஸ் கண்காணிக்கும் குளுக்கோமீட்டர் (அடையாள புகைப்படம்)

குளுக்கோமீட்டர் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடுகிறது. இருப்பினும் இந்த சாதனம் அனைவருக்கும் தேவையில்லை. தங்களது குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது தேவைப்பட்டால் குளுக்கோமீட்டர்களை மருத்துவர்கள் பரிந்துரைகள்படி பயன்படுத்தலாம்.

முதியோருக்கான சாதனம்: மருத்துவ எச்சரிக்கை அமைப்பு (அடையாள புகைப்படம்)

முதியோருக்கான சாதனம்: மருத்துவ எச்சரிக்கை அமைப்பு (அடையாள புகைப்படம்)

இந்த மருத்துவ எச்சரிக்கை அமைப்பானது தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கான சாதனமாக இருக்கிறது. அசௌகரியமாக பெரியவர்கள் உணரும் தருணத்தில் இதில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எச்சரிக்கை எழுப்பி தங்களது உதவியை பெறலாம். மருத்துவ அவசரி காலத்தில் தொலைபேசியை கண்டுபிடித்து எண்களை டைப் செய்து தங்களை தொடர்பு கொள்வது என்பது சிரமம். அதைவிட ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எளிதாக மருத்துவ எச்சரிக்கை அமைப்புகளை பெற முடியும். அதேபோல் மருத்துவ எச்சரிக்கை குறித்த மருத்துவ நிபுணர்களை ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

வலி மேலாண்மை: வலி நிவாரண சாதனங்கள் (அடையாள புகைப்படம்)

வலி மேலாண்மை: வலி நிவாரண சாதனங்கள் (அடையாள புகைப்படம்)

வீட்டில் வலி நிவாரண சாதனம் வைத்திருப்பது என்பது எந்த நேரத்திலும் உதவியாக இருக்கும். ஹாட் பேட்ஸ், மசாஜர்ஸ் மற்றும் நரம்பு தூண்டுதல்கள் போன்ற பல வகையான வலி நிவாரண சாதனங்கள் உள்ளன. இந்த வகை சாதனங்களை எப்போது எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

தொடர்பில்லா ஐஆர் தெர்மோமீட்டர் (அடையாள புகைப்படம்)

தொடர்பில்லா ஐஆர் தெர்மோமீட்டர் (அடையாள புகைப்படம்)

வெப்பமானி கருவி தொடர்பு இல்லாத ஐஆர் தொர்மோமீட்டர் மூலமாக பயன்படுத்தப்படும் முக்கியமான சாதனமாகும். தற்போது பெரிதும் பயன்படுத்தப்படும் சிறந்த கருவியாக இது இருக்கிறது. ஐஆர் தெர்மோமீட்டர் குறித்த பரிந்துரைகளை மருத்துவ நிபுணர்களை ஆலோசிக்கலாம்.

File images

Source: gadgetsnow.com

Pic Courtesy: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Keep all these medical gadgets at home to keep Your Health conscious

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X