Home
Gadgets

நீங்களும் இனி ஹேரி பாட்டர் ஆகலாம் வந்துவிட்டது ஹேரி பாட்டரின் மந்திரக்கோல் கிட்.!

நம்மில் பலருக்கும் சூப்பர் ஹீரோ ஆகா வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கும். அப்படிப் பட்ட விசித்திர ஆசைக்கு உருவம் கொடுத்துள்ளது கானோஸ்(kano's) நிறுவனம்.

By Sharath

நம்மில் பலருக்கும் சூப்பர் ஹீரோ ஆகா வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கும். அப்படிப் பட்ட விசித்திர ஆசைக்கு உருவம் கொடுத்துள்ளது கானோஸ்(kano's) நிறுவனம். ஹேரி பாட்டர் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக வந்துள்ளது தான் கானோஸ் நிறுவனத்தின் ஹேரி பாட்டர் மந்திர கோல் கிட்.

என்னப்பா சொல்ற, நீ சொல்றது எதுவும் நம்புற மாதிரி இல்லையேன்னு நீங்க சொல்றது என் காதுக்கே கேட்குது. உண்மையாக தன் சொல்ரேன் இனி நீங்களும் ஒரு சூப்பர் ஹீரோ ஆகலாம்.

ஹேரி பாட்டர் ரசிகர்களுக்காக

ஹேரி பாட்டர் ரசிகர்களுக்காக

ஹேரி பாட்டர் ரசிகர்களுக்காக சந்தையில் மாதிரி மந்திரக்கோல்கள் பல வந்துள்ளது. ஒலி இயக்கம் மற்றும் எல்இடி(LED) இயக்கமுடைய மந்திர கோல்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அந்த வரிசையில் லண்டன் நிறுவனமான கானோஸ் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. இந்த மந்திர கோல் கிட் உங்களை மந்திரங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதுடன் அவற்றைச் சேமித்து வைக்கவும் அனுமதி தருகிறது.

மந்திரக்கோலின் சிறப்பு

மந்திரக்கோலின் சிறப்பு

கானோஸ் மந்திரக்கோலின் சிறப்பு என்னவென்றால் நீங்களே அதை அசெம்பில் செய்வதுடன் கோடிங்-களை கற்றுக்கொள்ளலாம். உங்கள் மந்திரங்களுக்குக் காட்சி கொடுக்கப் பிரத்தியேக செயலியை வடிவமைத்துள்ளது இந்நிறுவனம். இந்த சவாலான மாய மந்திரங்களை மேக் புக், மொபைல் போன், லேப்டாப், ஐபாட் அல்லது ஆண்ட்ராய்டு டேப்லெட்களின் திரைகளில் உங்கள் மாயாஜால வித்தைகளை ரசிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கானோஸ் செயலி

கானோஸ் செயலி

கானோஸ் செயலி உங்களுக்கான தனி சுயவிவரத்தை உருவாக்குவதுடன், உங்கள் சூப்பர் மந்திர தந்திர மாயாஜால மாயாவி அவதார் உருவத்தை உருவாக்குகிறது. இந்த மாயாவி அவதார் தோற்றத்தை உங்கள் விருப்பத்திருக்கினங்க உடைகள் மற்றும் அதன் கண்ணாடிகளை மாற்றிக்கொள்ளலாம். அத்துடன் உங்களை ஒரு புதிய மாயாவி உலகிற்கே அழைத்துச் செல்கிறது.

மந்திரங்களைச் சோதனை செய்து பார்க்கலாம்

மந்திரங்களைச் சோதனை செய்து பார்க்கலாம்

எந்த நேரத்திலும் உங்கள் மந்திர கோலை எடுத்து மந்திரங்களைச் சோதனை செய்து பார்க்கலாம். இந்த பிளாஸ்டிக் மந்திரக்கோலில் கிரையோஸ்கோப்(gyroscope), ஆக்சிலரோமீட்டர்(accelerometer)மற்றும் மேக்னெட்டோமீட்டர்(magnetometer) என்று மூன்று சென்சார்கள் ப்ளூடூத் இணைப்புடன் இயங்குகிறது. கானோஸ் மந்திரக்கோல் அறுகோண வடிவத்துடன் முப்பரிமாண நிலைகளில் செயல்பட்டு மெர்சலடைய செய்கிறது.

நிஜ ஹேரி பாட்டராக மாற்றிக்கொள்ளலாம்

நிஜ ஹேரி பாட்டராக மாற்றிக்கொள்ளலாம்

முக்கியமாக மந்திரக்கோலின் பொத்தான் மற்றும் எல்இடி(LED) ஒளி மேல் திருப்பி பிடிக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் உங்கள் மந்திரங்கள் வேலை செய்யாது. புதுப் புது மந்திரங்களை உருவாக்கப் பல விதமான கோடிங்-கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மந்திரக்கோலின் ஆற்றலைப் புரிந்து அதிக மந்திரங்களை உருவாக்கி உங்களை நிஜ ஹேரி பாட்டராக மாற்றிக்கொள்ளலாம்.

"இன்செண்டியோ"(incendio) நெருப்பு மந்திரம்

ஹேரி பாட்டர் புகழ் பெற்ற "இன்செண்டியோ"(incendio) நெருப்பு மந்திரம் முதல் அனைத்து மந்திரங்களும் கானோஸ் மந்திரக்கோலின் வசம் உள்ளது. இந்த உருவ மந்திரங்களை இன்னம் சுவாரசியமாக்க இவர்கள் செய்துள்ள ப்ரோகிராம் கோடிங்-கள் நம்மை ஆசிரியத்தில் ஆழ்த்துகிறது. நெருப்பின் நிறத்தை மாற்றி நீல நிற நெருப்பாக மற்ற தனி மந்திரம், கூடுதல் தீப்பொறிகள் வரத் தனி மந்திரம் என இவர்களின் மந்திர பட்டியல்கள் நீண்டு கொன்டேசெல்கிறது.

அக்டோபர் முதல் விற்பனையில்

அக்டோபர் முதல் விற்பனையில்

இந்த அசத்தலான மந்திரக்கோலின் ஒரே ஒரு குறையாக இப்போது பார்க்கப்படுவது வாய்ஸ் ஆக்டிவ் கட்டளை மட்டுமே. வாய்ஸ் ஆக்டிவ் கட்டளை வெளியீட்டிற்கு முன்னர் சேர்க்கப்படும் எனத் தோன்றுகிறது, இது மட்டும் சில ஏமாற்றத்தை தருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் விற்பனையில் இறங்குகிறது கானோஸ் மந்திரக்கோல் கிட், இப்பொழுதே பல நாடுகளில் முன்பதிவுகளைத் தொடங்கிவிட்டது கானோஸ் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Kano's next coding kit is a Harry Potter wand : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X