பட்ஜெட் விலையில் அசத்தலான ஜேவிசி 43-இன்ச் 4கே எல்இடி டிவி அறிமுகம்.!
குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளை பதிவிறகம் செய்து இந்த ஸ்மார்ட் டிவியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜேவிசி என்ற நிறுவனம் இந்தியாவில் புதிய ஜேவிசி (43N7150C) யுஎச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அட்டகாசமான வடிவமைப்பில்
இந்த ஸ்மார்ட்டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
ஜேவிசி (43N7150C) யுஎச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2160 ஒ 3840 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அசத்தான ஸ்மார்ட் டிவி மாடல்.

குவாட்-கோர்:
ஜேவிசி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி மற்றும் Sensywall இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பெசல்-லெஸ்:
இந்த ஸ்மார்ட் டிவியில் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் குவாண்டம் பேக்லைட் டெக்னாலி இடம்பெற்றுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஜேவிசி ஸ்மார்ட் டிவி
மாடல்

அமேசான் பிரைம் வீடியோ
குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளை பதிவிறகம் செய்து இந்த ஸ்மார்ட் டிவியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

விலை:
இந்த ஜேவிசி சாதனத்தில் 2 யுஎஸ்பி போர்ட், 3எச்டிஎம்ஐ போர்ட், 20வாட் ஸ்பீக்கர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு ரூ.24,990-விலையில் ஜேவிசி 43-இன்ச் 4கே எல்இடி டிவி மாடலை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications