ஆரம்ப விலை ரூ.11,999.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. அறிமுகமானது புதிய QLED ஸ்மார்ட் டிவிகள்..
ஜப்பானிய பிராண்டான JVC புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஜேவிசி ஏஐ விஷன் QLED ஸ்மார்ட் டிவிகளை ( (JVC AI Vision QLED TV) கொண்டுவந்துள்ளது ஜேவிசி நிறுவனம். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஜேவிசி ஏஐ விஷன் கியூஎல்இடி டிவி சீரிஸ் அம்சங்கள் (JVC AI Vision QLED TV Specifications): 32 இன்ச், 40 இன்ச், 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் ஜேவிசி ஏஐ விஷன் டிவி சீரிஸ் மாடல்கள் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த புதிய ஜேவிசி கியூஎல்இடி டிவி மாடல்கள் 3480 X 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 1 பில்லியன் கலர்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளன.

அதேபோல் தரமான ரியல்டெக் பிராசஸர் (Realtek processor) உடன் இந்த ஜேவிசி ஏஐ விஷன் டிவி சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜேவிசி நிறுவனம்.
மேலும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவிகள் இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன.
குறிப்பாக இந்த டிவிகளில் 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), லேன் போர்ட் (LAN Port), ஈதர்நெட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. இதுதவிர மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி கொண்டுள்ளது இந்த ஜேவிசி ஏஐ விஷன் டிவி சீரிஸ் மாடல்கள்.

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 80W சவுண் அவுட்புட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஜேவிசி ஏஐ விஷன் டிவி சீரிஸ் மாடல்கள். எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த புதிய டிவகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுகளும் இந்த டிவிகளில் உள்ளன.
ஜேவிசி ஏஐ விஷன் 32 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 40-இன்ச் விலை ரூ.15,999, 43-இன்ச் விலை ரூ.23,999, 50-இன்ச் விலை ரூ.29,999, 55-இன்ச் விலை ரூ.35,999, 65-இன்ச் விலை ரூ.49,999, 75-இன்ச் விலை ரூ.89,999 ஆகும். ஜனவரி 14 முதல் அமேசான் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: jvc, 91mobiles


Click it and Unblock the Notifications








