ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.399 க்கு நெக்பேண்ட், ரூ.699 க்கு TWS இயர்பட்ஸ்.. ரூ.1099 க்கு ஸ்மார்ட் வாட்ச்!
ஆளுக்கு 2 அள்ளி போடுங்க என்கிற பட்ஜெட் விலையில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.400 தொடங்கி ரூ.1200 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. ஆடியோ மற்றும் மொபைல் ஆக்சஸெரீஸ் பிராண்ட் ஆன ஜஸ்ட் கோர்செகா (JUST CORSECA) நிறுவனமானது, ஒரே நேரத்தில் பல 10 புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
இந்நிறுவனம் டிடபுள்யூஎஸ் சீரிஸின் கீழ் 3 இயர்பட்ஸ் மாடல்கள், நெக் பேண்ட் சீரீஸின் கீழ் 5 நெக்பேண்ட் ஹெட்செட் மாடல்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸின் கீழ் 3 ஸ்மார்ட்வாட்ச்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன மாடல்கள்? அவைகளின் அறிமுக விலை நிர்ணயம் என்ன? என்னென்ன முக்கிய அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

டிடபுள்யூஎஸ் சீரிஸ்:
1. ஸ்கை டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (SKYE TWS): அறிமுக விலை நிர்ணயம்ரூ.699
2. சில்வர் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (Silver TWS): அறிமுக விலை நிர்ணயம் ரூ.799
3. ஸ்னாப்பர் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (Snapper TWS): அறிமுக விலை நிர்ணயம் ரூ.799
டிடபுள்யூஎஸ் சீரிஸின் முக்கிய அம்சங்கள்: ஸ்கை டிடபுள்யூஎஸ், சில்வர் டிடபுள்யூஎஸ் மற்றும் ஸ்னாப்பர் டிடபுள்யூஎஸ் ஆகிய 3 மாடல்களுமே உயர்தர ஆடியோவிற்காக 10மிமீ ட்ரைவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் 40 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகின்றன. 10 மீட்டர் வரம்பை கொண்ட ப்ளூடூத் வி5.4 ஆதரவை கொண்டுள்ளன.
மேலும் வயர்லெஸ் அழைப்பிற்கான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ப்ரொஃபைல், உயர்தர ஆடியோ ஸ்ட்ரீமிங்கிற்கான மேம்பட்ட ஆடியோ டிஸ்ட்ரிபியூஷன் ப்ரொஃபைல் மற்றும் மீடியா பிளேபேக் கட்டுப்பாட்டிற்கான ஆடியோ/வீடியோ ரிமோட் கண்ட்ரோல் ப்ரொஃபைல் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ஸ்மார்ட் சாஃப்ட் டச் கண்ட்ரோல்கள் மற்றும் டைப்-சி சார்ஜிங் உள்ளன.
நெக்பேண்ட் சீரீஸ்:
1. ஸ்டாலியன் ஸ்டார் நெக்பேண்ட் (Stallion Star Neckband): அறிமுக விலை ரூ.399
2. ஸ்டாலியன் கோர் நெக்பேண்ட் (Stallion Core Neckband): அறிமுக விலை ரூ.499
3. ஸ்டாலியன் வேவ் நெக்பேண்ட் (Stallion Wave Neckband): அறிமுக விலை ரூ.599
4. ஸ்டாலியன் எக்கோ நெக்பேண்ட் (Stallion Echo Neckband): அறிமுக விலை ரூ.799
5. ஸ்டாலியன் ப்ரோ நெக்பேண்ட் (Stallion Pro Neckband): அறிமுக விலை ரூ.699
நெக்பேண்ட் சீரீஸின் முக்கிய அம்சங்கள்: ஸ்டாலியன் ஸ்டார், ஸ்டாலியன் கோர், ஸ்டாலியன் வேவ், ஸ்டாலியன் எக்கோ மற்றும் ஸ்டாலியன் ப்ரோ ஆகிய 5 மாடல்களுமே பாதுகாப்பான மேக்னட் பட்ஸ்களை கொண்டுள்ளன. மேலும் 10 மிமீ ட்ரைவர்கள், 10 மீட்டர் வரம்பை கொண்ட ப்ளூடூத் வி5.3 மற்றும் 55 மணிநேரம் வரை பேட்டரியை கொண்டுள்ளன.
மேலும் தடையற்ற ஹேண்ட்ஸ்-ஃப்ரீ செயல்பாட்டிற்கான வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் வருகின்றன. கூடவே இந்த மாடல்கள் வசதியான பவர்-அப்களுக்காக டைப்-சி சார்ஜிங் போர்ட்களை கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் டூயல் டிவைஸ் கனெக்ட்விட்டி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புடன் வருகின்றன, இது உடற்பயிற்சிகள், பயணம் மற்றும் தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
ஸ்மார்ட்வாட்ச் சீரீஸ்:
1. சிக்னேச்சர் ஸ்மார்ட்வாட்ச் (Signature Smartwatch): அறிமுக விலை நிர்ணயம் ரூ.1099
2. ஸ்கைவாட்ச் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் (Skywatch PRO Smartwatch): அறிமுக விலை நிர்ணயம் ரூ.1199
ஜஸ்ட் கோர்செகாவின் இந்த லேட்டஸ்ட் ஆடியோ மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அனைத்துமே பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், அமேசான் இந்தியா போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெயில் கடைகளிலும் வாங்க கிடைக்கின்றன.
ஸ்மார்ட்வாட்ச் சீரீஸின் முக்கிய அம்சங்கள்: சிக்னேச்சர் மற்றும் ஸ்கைவாட்ச் ப்ரோ ஆகிய 2 மாடல்களுமே இதய துடிப்பு கண்காணிப்பு, நிகழ்நேர ஸ்போர்ட்ஸ் கண்காணிப்பு, ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் தடையற்ற டிவைஸ் ஒருங்கிணைப்புக்கான ஃபைண்ட்-மை-ஃபோன் செயல்பாடு உள்ளிட்ட ஹெல்த் மற்றும் லைஃப்-ஸ்டைல் அம்சங்களை கொண்டுள்ளது
மெசேஜ்களையும், கால்களையும் ஒரு எளிய டேப் மூலம் அணுகலாம், அதே நேரத்தில் 2-பின் கேபிள் மூலம் மேக்னட் சார்ஜிங் மூலம் விரைவாக மற்றும் திறமையா பவர்-அப் செய்யலாம். ப்ளூடூத் V5.0 மற்றும் V5.4 உடன் வரும் இந்த இரண்டு மாடல்களும் 2.01-இன்ச் அளவிலான டிஎப்டி டிஸ்பிளே (240 x 296 ரெசல்யூஷன்) கொண்டுள்ளன. 15 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம் மற்றும் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும் இந்த மாடல்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களுக்கான பிட்ப்ரோ (FitPro) மற்றும் ரிஃபைன் (Hryfine) ஆப்களுடன் இணக்கமாக செயல்படும்.


Click it and Unblock the Notifications








