Home
Gadgets

இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஸ்மார்ட் டிவிகளை விட தற்போது ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் தற்போது பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

அதன்படி தற்போது JMGO என்ற நிறுவனம் JMGO பி5 (JMGO P5) போர்ட்டபிள் புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 1080 பிக்சல்ஸ், 5 மணி நேரம் பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் மாடலின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. எந்த மாடல்?

JMGO பி5 அம்சங்கள் (JMGO P5 portable projector Specification): இது ஒரு எல்இடி புரொஜெக்டர் ஆகும். சிறிய ஸ்பீக்கர் போன்ற வடிவமைப்பைக் கொண்ட JMGO பி5 புரொஜெக்டர் ஆனது 1080 பிக்சல் ரெசல்யூஷன் (1080P resolution) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 450 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான JMGO பி5 மாடல். எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

709 கலர் காமட் (Color Gamut)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான JMGO பி5 மாடல். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் இசை, பாடல்கள் என அனைத்தையும் இதில் சேமித்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. எந்த மாடல்?

அதேபோல் JMGO பி5 மாடலை புளூடூத் ஸ்பீக்கராக கூட பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த அதிநவீன போர்ட்டபிள் புரொஜெக்டர் மாடலை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். அதேபோல் இந்த JMGO பி5 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பில்ட்-இன் பேட்டரி (built-in battery) வசதியைக் கொண்டுள்ளது இந்த JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் ஆனது ரிவர்ஸ் சார்ஜிங்கை கூட ஆதரிக்கிறது. எனவே உங்களது ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்தி கூட இந்த புரொஜெக்டரை சார்ஜ் செய்ய முடியும்.

எச்டிம்ஐ 2.1, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் லோவ் ப்ளூ லைட் (low blue light) அம்சங்களுடன் இந்த போர்ட்டபிள் புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுப்பதால் இந்த புரொஜெக்டர் மாடலை நம்பி வாங்கலாம்.

இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. எந்த மாடல்?

அதேபோல் இந்த JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.27,000) ஆக உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் JMGO பி5 போர்ட்டபிள் புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட இதுபோன்ற புரொஜெக்டர் மாடல்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் தற்போது அதிநவீன புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.

Photo courtesy: jmgo, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
JMGO launches P5 portable projector with 1080P resolution: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X