Home
Gadgets

ஆளுக்கு 4 வாங்கும் விலையில் JioTag Go அறிமுகம்.. Google-ன் Find My Device ஆதரவு.. 9 கிராம் எடை!

ஜியோடேக் கோ (JioTag Go) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கிற்கான ஆதரவை (Google's Find My Device network support) கொண்ட இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு டிராக்கர் என்று கூறப்படுகிறது. இது வேறு என்னென்ன அம்சங்களை, திறன்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ஜியோடேக் கோ டிராக்கரின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களின் நெட்வொர்க்கை பயன்படுத்தும் கூகுள் பைண்ட் மை டிவைஸ் ஆப் (Google Find My Device App) மூலம் பயனர்கள் இந்த டிராக்கரை கண்டறியலாம்.

ஆளுக்கு 4 வாங்கும் விலையில் JioTag Go அறிமுகம்!

மேலும் இந்த ப்ளூடூத்-எனேபிள்டு டிராக்கர் ஆனது 1 வருடம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குமென்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் (கடந்த ஜூலை மாதம்), ரிலையன்ஸ் நிறுவனமானது ஜியோடேக் ஏர் (JioTag Air) என்கிற டிராக்கரை அறிமுகப்படுத்தியதும், அது ஆப்பிளின் பைண்ட் மை நெட்வொர்க் (Apple Find My Network) உடன் இணக்கமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ஜியோடேக் கோ டிராக்கரின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, ஜியோடேக் கோ கூகுளின் பைண்ட் மை டிவைஸ் அம்சத்துடன் இணக்கமான ப்ளூடூத் டிராக்கராகும். கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அணுக கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான பைண்ட் மை டிவைஸ் ஆப் உடன் இந்த டிராக்கரை இணைக்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் உடமைகளை கண்காணிக்க இதை பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இதை சாவிகள், பர்ஸ்கள், லக்கேஜ்கள், கேஜெட்டுகள், பைக்குகள் மற்றும் பலவற்றுடன் இணைக்கலாம், ஒருவேளை அவைகளில் ஏதேனும் ஒன்று தொலைந்து போனால், அதை கண்டுபிடிக்க இந்த டிராக்கரை பயன்படுத்தலாம்

ப்ளூடூத் வரம்பிற்குள் இருக்கும் போது, ​​ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் வழியாக 'ப்ளே சவுண்ட்' விருப்பத்தை கிளிக் செயலாம். இப்படி செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஜியோடேக் கோ ஆனது பீப் சத்தத்தை உருவாக்கும், இது தொலைந்த பொருளை எளிதாக கண்டறிய உதவும். ஒருவேளை ப்ளூடூத் வரம்பிற்கு வெளியே இருந்தால், டிராக்கரின் கடைசி லோக்கேஷனை கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் மூலம் கண்டறிய முடியும்.

இந்த ஆப்பில் கெட் டைரக்ஷன்ஸ் என்கிற விருப்பத்துடன் தோன்றும் வரைபடத்தை வைத்தும் கூட, பயனர்கள் தாங்கள் தொலைத்த பொருளை தேடி கண்டுபிடிக்கலாம். ஒருமுறை ரேன்ஜ் கிடைத்ததும், ஜியோடேக் கோ ஆனது தானாகவே பயனரின் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும். மேலும் பயனர்கள் டிராக்கரை கண்டறிய பிளே சவுண்ட் அம்சத்தையும் பயன்படுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த லேட்டஸ்ட் ப்ளூடூத் டிராக்கர் ஆனது ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானது. இது ஐபோன்களுடன் கனெக்ட் ஆகாது. ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி ஜியோடேக் ஏர் ஆனது ஐஓஎஸ் 14 அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்கும் ஐபோன் மாடல்களுடனும், ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடனும் இணக்கமானதாக இருக்கிறது

ஜியோடேக் கோ செயல்பட சிம் கார்டு தேவையில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ப்ளூடூத் 5.3 இணைப்பை ஆதரிக்கிறது மற்றும் CR2032 பேட்டரியை கொண்டுள்ளது. இது 1 வருடம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் பட்டியலின்படி, இந்த டிராக்கர் அளவீட்டில் 38.2 x 38.2 x 7.2 மிமீ மற்றும் எடையில் 9 கிராம் உள்ளது.

ஜியோடேக் கோ விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஜியோடேக் கோ ரூ.1,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான், ஜியோமார்ட் இ-ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. இந்த டிராக்கர் பிளாக், ஆரஞ்சு, ஒயிட் மற்றும் எல்லா கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioTag Go Bluetooth Tracker With Google Find My Device Support Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X