ஆளுக்கு ஒன்னு வாங்குங்க.. பல அற்புதங்கள் செய்யும் Jio-வின் குட்டி சைஸ் டிவைஸ்.. JioTag Air விலை என்ன?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆப்பிள் ஏர்டேக் (Apple AirTag) சாதனம் போன்ற ஒரு சொந்த தயாரிப்பை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்தை ஜியோ நிறுவனம் ஜியோடேக் ஏர் (JioTag Air) என்ற பெரியாருடன் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு விறல் இடுக்கில் கச்திமாக பொருந்தும் மிகவும் சிறிய ஸைஸில் ஜியோ நிறுவனம் இந்த புதிய ஜியோடேக் ஏர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு ஜியோ ட்ராக்கர் சாதனமாகும் (Jio Tracker device). இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.
ரிலையன்ஸ் நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில், ஒரு புதிய கையடக்க கேட்ஜெட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோடேக் ஏர் (JioTag Air) என்ற பெயருடன் வெளிவந்துள்ள ட்ராக்கர் டிவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் சாதனம் ஜியோ திங்ஸ் ஆப்ஸ் வழியாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் பைண்ட் மை நெட்வொர்க் போன்ற தளங்களின் உதவியுடன் இயங்குகிறது. இனி வரும் காலத்தில் இதுவொரு கட்டாய கேட்ஜெட்டாக மாறும் என்று நம்பப்படுகிறது.

ஜியோடேக் ஏர் (JioTag Air):
காரணம், இதை மக்கள் பல பயன்பாடுகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவொரு ட்ராக்கர் சாதனம் என்பதால், இதை எந்த பொருளுடன் இணைத்து பயன்படுத்தும் போது, அந்த பொருள் எங்கிருக்கிறது என்பதை உங்கள் ஸ்மார்ட்போனில் ரூட் மேப்ஸ் உடன் தெள்ளத்தெளிவாக காண்பிக்கிறது. இதை வைத்து பயனர்கள் என்னவெல்லாம் செய்ய முடியும். உதாரணமாக, உங்கள் கார் அல்லது பைக் சாவியுடன் இதை இணைத்து கீசெயின் போல பயன்படுத்தலாம்.
உங்கள் கீசெயினை இனி தேடி அலையவேண்டியதில்லை. உங்கள் போனை எடுத்து ஜியோடேக் ஏர் எங்கே இருக்கிறது என்று கிளிக் செய்தால், அது இருக்கும் இடத்தை காண்பிக்கும். மறைந்திருக்கும் இடங்களை அறிந்துகொள்ள இந்த ஜியோடேக் ஏர் சாதனத்தில் அலாரம் அம்சத்தை கூட ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் உதவியோடு இனி இவற்றின் இடத்தை கண்டறிவது சுலபமானது.
இந்த ஜியோடேக் ஏர் டிவைஸை உங்கள் வாலெட் (Wallet), பேக் (Bag), பேக்கேஜ் (Packages), லக்கேஜ் (Luggage), செல்லப்பிராணிகளின் கழுத்தில் டாலர் (Pets collar dollar), குழந்தைகளின் ஸ்கூல் பேக் (Scool bags) மற்றும் சைக்கிள் (Cycle) போன்றவற்றில் கூட இதை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுக சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
பல அற்புதங்கள் செய்யும் Jio-வின் குட்டி சைஸ் டிவைஸ்.. ஜியோடேக் ஏர் விலை (JioTag Air Price):
JioTag Air சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இதை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 2999 என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக இதை இப்போது வெறும் ரூ. 1499 என்ற விலையில் மக்கள் வாங்கி பயன்பெற முடியும். புதிய ஜியோடேக் ஏர் (JioTag Air) ரெட் (Red), ப்ளூ (Blue) மற்றும் க்ரேய் (Grey) நிறங்களில் வெளிவந்துள்ளது.
இவை அமேசான் இந்தியா (Amazon India), ஜியோமார்ட் (JioMart) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) போன்ற தளங்களில் வாங்க கிடைக்கும். இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஏர் டேக் சாதனத்தின் விலையான ரூ. 3499 விலையை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜியோடேக் ஏர் (JioTag Air) சாதனம் உங்களிடம் இருந்தால், உங்களுடைய முக்கியமான பொருட்களை நீங்கள் ஒரு போதும் மிஸ் செய்ய முடியாமல் பத்திரமாக பாதுகாக்கலாம்.


Click it and Unblock the Notifications








