Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. Apple AirTag-ஐ அப்படியே உல்டா பண்ணி.. JioTag அறிமுகம்.. என்ன விலை? வாங்குவது எப்படி?

100% வியாபாரி என்றால் அது முகேஷ் அம்பானி தான். அதற்கான ஆகச்சிறந்த சாட்சி, இந்தியாவில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோடேக் (JioTag) தான். இதை ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ப்ளூடூத் டிராக்கர் (Bluetooth Tracker) ஆன ஏர்டேக் (AirTag) டிவைஸின் "ஈயடிச்சான் காப்பி" என்றே கூறலாம்.

ப்ளூடூத் இணைப்பை (Bluetooth Connectivity) பயன்படுத்தி ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யக்கூடிய ஆதரவுடன் வரும் ஜியோடேக் ஆனது ஆப்பிள் ஏர்டேக்கை போலவே, அது இணைக்கப்பட்டுள்ள பொருளை கண்காணிக்க உதவுகிறது. ரிலையன்ஸ் ஜியோவால் உருவாக்கப்பட்ட இந்த புதிய டிராக்கர் ஆனது ஆப்பிளின் ஏர்டேக்குகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. JioTag அறிமுகம்.. வாங்குவது எப்படி?

ஜியோடேக் அம்சங்கள்: இது மாற்றக்கூடிய சிஆர்2023 பேட்டரி (Replaceable CR2032 battery) மூலம் இயக்கப்படுகிறது, ஜியோவின் கூற்றுப்படி, இது ஒரு வருட பேட்டரி ஆயுளை (Battery Life) வழங்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த டிராக்கரை ப்ளூடூத் வி5.1 வெர்ஷனை (Bluetooth V5.1 Version) பயன்படுத்தி ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும்.

இதை பைக் அல்லது ஸ்கூட்டர் சாவியுடன், அல்லது பர்ஸ் (பணப்பை) உடன், அல்லது வேறு எந்த தனிப்பட்ட பொருளுடனும் வைத்துக்கொள்ள முடியும்; இதன் மூலம் குறிப்பிட்ட பொருட்களை துல்லியமா கண்காணிக்கவும் முடியும். ஜியோடேக்கில் உள்ள லேன்யார்ட் கேபிள் (Lanyard cable) ஆனது, அதை மற்ற பொருட்களுடன் எளிதாக இணைக்க உதவுகிறது.

ஜியோவின் கூற்றுப்படி, இது வீட்டிற்குள் 20 மீட்டர் மற்றும் வெளியில் 50 மீட்டர் வரையிலான கண்காணிப்பு தூரத்தை (Tracking distance) வழங்கும். அளவீட்டில், ஜியோடேக் ஆனது 9.5 கிராம் எடையும், 38.2மிமீ x 38.2மிமீ x 7.2மிமீ உள்ளது. வழக்கமான பொருட்களை கண்டறிவதை தவிர்த்து, இதை ஸ்மார்ட்போன்களை கண்காணிக்கவும் பயன்படுத்தலாம்.

சுவாரசியமாக, உங்கள் போன் சைலண்ட் மோடில் (Silent Mode) இருந்தாலும் கூட ஜியோடேக்கை இருமுறை தட்டிவதன் (Double Tapping) மூலம் உங்கள் போனை ரிங் செய்ய வைக்க முடியும். மேலும் ஜியோவின் இந்த ப்ளூடூக் டிராக்கர் ஆனது ஜியோ கம்யூனிட்டி ஃபைண்ட் (Jio Community Find) அம்சத்தையும் ஆதரிக்கிறது.

அதாவது, ஜியோடேக் உடன் இணைக்கப்பட்ட ஒரு பொருளை உங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றால், ​​உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் (JioThings) என்கிற ஆப்பின் வழியாக உங்களுடைய ஜியோடேக் ஆனது தொலைந்துவிட்டதாக பட்டியலிடலாம். அதன் பின்னர் கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சமானது தொலைந்து போன ஜியோடேக்கின் இருப்பிடத்தைத் தேடித் தெரிவிக்கும்.

ஜியோடேக் விலை மற்றும் அம்சங்கள்: ஜியோடேக் ப்ளூடூத் டிராக்கர் ஆனது ஜியோ.காம் (Jio.com) வழியாக, ரூ.749 என்கிற சிறப்பு சலுகை விலையின் (Special Offer Price) கீழ் வாங்க கிடைக்கிறது. ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி ஜியோடேக்கின் அசல் விலை (Original Price) ரூ.2,199 ஆகும்.

இது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கோட்களில் (PIN Codes) உள்ளவர்களுக்கு கேஷ்-ஆன் டெலிவரி விருப்பத்தின் கீழும், மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கு ப்ரீபெய்ட் ஆர்டர்களின் கீழும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை நிற விருப்பத்தில் மட்டுமே வரும் இந்த லைட்வெயிட் டிராக்கரின் பாக்ஸில் கூடுதல் பேட்டரி மற்றும் லேன்யார்ட் கேபிள் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
JioTag A New Bluetooth Tracker Like Apple AirTag Launched in India Check Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X