Home
Gadgets

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. JioFrames ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் அறிமுகம்.. முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 48ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் (48th Annual General Meeting) ஜியோஃப்ரேம்ஸ் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் (JioFrames AI Smart Glasses) அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஜியோஃப்ரேம்ஸ் கிளாஸ் என்ன செய்யும்? விலை மற்றும் விற்பனை எப்போது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மெட்டா நிறுவனத்தின் ரேய்-பேன் (Ray-Ban) ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ்-இன் வருகைக்கு பிறகு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் தயாரிப்பில் ஈடுபட தொடங்கின. இந்தியாவிலும் மெட்டா ரேய்-பேன் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆகவே, இந்த ரேய்-பேன் கிளாஸ்சஸ்-க்கு போட்டியாக ஜியோ நிறுவனம் இப்போது களமிறங்கி இருக்கிறது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. JioFrames ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் அறிமுகம்!

அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 48ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், ஒட்டுமொத்த டெக் பிரியர்களையும் ஜியோஃப்ரேம்ஸ் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் தட்டித் தூக்கிவிட்டது. இந்திய மொழிகளுக்கு ஏற்ப வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த ஜியோஃப்ரேம்ஸ் இருக்கப்போகிறது.

ஹேண்ட் கன்ட்ரோல்கள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வாய்ஸ் கான்ட்ரோல்கள் மூலமும் இந்த ஜியோஃப்ரேம்ஸ் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் இயக்கப்பட இருக்கிறது. குறிப்பாக இந்திய மொழிகள் சேர்க்கப்படுவதால், இந்த வாய்ஸ் கான்ட்ரோல்களை உங்களது மொழியில் செய்து கொள்ளலாம். ஆகவே, ஒட்டுமொத்த தரப்பினருக்கும் இது சென்று சேர வாய்ப்புகள் அதிகமாகும்.

ஜியோஃப்ரேம்ஸ் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் பீச்சர்கள் (JioFrames AI Smart Glasses Features): இந்த ஜியோஃப்ரேம்ஸ் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, லைட் வெயிட் மற்றும் கண்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனை போலவே எப்போதும், எந்த நேரத்திலும் போட்டோக்களை எடுத்து கொள்ளலாம்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. JioFrames ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸ் அறிமுகம்!

அதேபோல மியூசிக் ஆப்ஷன் இருக்கிறது. ஆகவே, பாடல்களை கேட்க முடியும். ஜியோவின் வாய்ஸ் ஏஐ (Jio Voice AI) இதில் கிடைக்கிறது. இந்த ஏஐ அசிஸ்டன்ட் ஆனது இந்திய மொழிகளுடன் இன்டிகிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, உங்களது மொழியில் வாய்ஸ் அசிஸ்டன்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம்.

இதில் ஏஐ டிரான்ஸ்லேஷனும் அடங்கும். அதாவது, உங்களுக்கு வேறு மொழி பேசுபவரிடம் இருந்து வாய்ஸ் கால்கள் வந்தால், அதை உங்களது மொழியில் ரியல் டைமில் டிரான்லேஷன் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு மொழி தொடர்பான இடைவெளி இருக்காது. அதேபோல கான்பிரன்ஸ், மீட்டிங் போன்றவற்றிலும் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம்.

இதை அந்த மொழியில் இருந்து உங்களது மொழிக்கு டிரான்ஸ்லேஷன் செய்து, இந்த ஜியோஃப்ரேம்ஸ் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்சஸில் இருக்கும் ஸ்பீக்கர்கள் மூலம் எடுத்துரைக்கப்படும். அதேபோல எச்டி வீடியோ ரெக்கார்டிங் (HD Video Recording) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், இந்த ஜியோஃப்ரேம்ஸ் மூலம் ஸ்மார்ட் லேர்னிங் செய்து கொள்ளலாம்.

அதாவது, ஒரு புத்தகத்தை படிக்கும்போதோ அல்லது ஏதாவது கணக்கு போடும்போதோ அல்லது ஏதாவதொரு ஆப்ஜெக்ட்டை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும்போதோ இந்த ஜியோஃப்ரேம்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களது வாய்ஸ் மூலம் கேள்வியாக கேட்டால் போதும், அதற்கு வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் பதில்கள் கொடுக்கப்படும்.

அதேபோல நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடந்தீர்கள் உள்ளிட்ட ஹெல்த் தொடர்பான கேள்விகளையும் கேட்டு பதில்களை பெற்று கொள்ளலாம். மேலும், டிராவல் செய்யும்போது, மெனுக்களை டிரான்ஸ்லேட் செய்வது, அறிவிப்பு பலகைகளை டிரான்ஸ்லேட் செய்வது, வேறு மொழியில் ஒருவர் பேசும்போது, அதை உங்களது மொழியில் டிரான்ஸ்லேட் செய்வதும் இதில் சாத்தியமாகும்.

இப்படி பல்வேறு பீச்சர்களை இது கொடுக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படுவதாலும், இந்திய நிறுவனம் தயாரிப்பதாலும் உள்நாட்டு மொழிகளிலுக்கு ஏற்ப இதில் கட்டமைப்புகள் இருக்கும். ஆகவே, இது பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை ஜியோ வெளியிடவில்லை. விரைவில் அதை எதிர்பார்க்கலாம். மலிவு விலைக்கு கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioFrames AI Smart Glasses Unveiled At RIL 48th Annual General Meeting 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X