சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சத்தமில்லாமல் அதன் புதிய லேப்டாப் மாடலான JioBook சாதனத்தை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எதிர்பார்த்திடாத வகையில் இந்த லேப்டாப் சாதனத்தை நிறுவனம் மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உண்மையிலேயே, இந்த பட்ஜெட் விலையில், இந்த ஜியோபுக் (JioBook) லேப்டாப் டிவைஸை நாம் நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம்.

JioBook என்ற பட்ஜெட் செக்மென்ட் லேப்டாப்பை Jio அறிமுகம் செய்ததா?

JioBook என்ற பட்ஜெட் செக்மென்ட் லேப்டாப்பை Jio அறிமுகம் செய்ததா?

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் செக்மென்ட் லேப்டாப் சாதனத்தை இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்வில் காட்சிப்படுத்தியது. புதிய JioBook பட்ஜெட் லேப்டாப், குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு பட்ஜெட் விலை லேப்டாப் மாடலாக இருந்தாலும் கூட, இதன் செயல்திறனில் அதிக சமரசம் செய்யாமல் தரமான லேப்டாப்பை ஜியோ உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஜியோபுக் லேப்டாப்பின் இந்திய விலை வெளியானதா?

ஜியோபுக் லேப்டாப்பின் இந்திய விலை வெளியானதா?

இந்த புதிய JioBook லேப்டாப் சாதனத்தை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது இந்தியாவில் சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. ஜியோபுக் சாதனம் இப்போது அரசாங்க ஆன்லைன் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது JioBook லேப்டாப்பின் விபரங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பட்ஜெட் ஜியோ லேப்டாப்பின் விலையையும் உறுதிப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஜியோபுக் லேப்டாப்பின் இந்திய விலை, சிறப்பம்சம் மற்றும் விற்பனை விபரங்கள் பற்றிப் பார்க்கலாம்.

உங்க Internet ஒழுங்கா வேலை செய்கிறதா? இல்லையா? உடனே இப்படி ஸ்பீட் டெஸ்ட் செய்யுங்க.!உங்க Internet ஒழுங்கா வேலை செய்கிறதா? இல்லையா? உடனே இப்படி ஸ்பீட் டெஸ்ட் செய்யுங்க.!

புதிய JioBook லேப்டாப்பின் விலை என்ன?

புதிய JioBook லேப்டாப்பின் விலை என்ன?

Jio நிறுவனம் புதிய JioBook Laptop மாடலை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. அரசுக்குச் சொந்தமான இ-மார்க்கெட்பிளேஸில் இந்த ஜியோபுக் சந்தானம் அதன் விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.19,500 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை லேப்டாப் சாதனமாக இந்த புதிய JioBook டிவைஸ் இருக்கப் போகிறது என்பதை அதன் விலை தெளிவாக நமக்கு புரியவைத்துவிட்டது.

JioBook லேப்டாப் விற்பனை எப்போது துவங்கும்? சலுகை எதுவும் உண்டா?

JioBook லேப்டாப் விற்பனை எப்போது துவங்கும்? சலுகை எதுவும் உண்டா?

JioBook லேப்டாப்பின் விற்பனை தேதி பற்றி பேசுகையில், இன்னும் நிறுவனம் விற்பனை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. ஜியோ லேப்டாப் மீது நிறுவனம் இப்போதைக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை. ஆனால், இந்த JioBook லேப்டாப் சாதனத்தை ஜியோ நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு முன் விற்பனைக்குக் களமிறக்கினால், கண்டிப்பாக சில குறிப்பிட்ட சலுகைகளை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SIM கார்டு மற்றும் OTT-ல் போலி அடையாளமா? அப்போ, 1 வருட சிறை தண்டனை.! ரூ.50,000 அபராதம்.!SIM கார்டு மற்றும் OTT-ல் போலி அடையாளமா? அப்போ, 1 வருட சிறை தண்டனை.! ரூ.50,000 அபராதம்.!

ஜியோபுக் லேப்டாப்பின் சிறப்பம்சம்

ஜியோபுக் லேப்டாப்பின் சிறப்பம்சம்

JioBook லேப்டாப் சாதனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சலுகை பற்றிய கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். சரி, இப்போது ஜியோபுக் லேப்டாப்பின் சிறப்பம்ச விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஜியோபுக் சாதனம் ஒரு பட்ஜெட் நோட்புக் மாடலாகும். இது ப்ளூ வண்ண விருப்பத்தில் மட்டுமே வருகிறது. இந்த லேப்டாப் ஜியோவிற்கு சொந்தமான JioOS இல் இயங்குகிறது.

JioBook லேப்டாப்பின் தனிச் சிறப்பே இந்த அம்சங்கள் தான்!

JioBook லேப்டாப்பின் தனிச் சிறப்பே இந்த அம்சங்கள் தான்!

இது இந்தியாவில் ஜியோ லேப்டாப்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட விண்டோஸின் போர்க் செய்யப்பட்ட எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த JioBook லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் வருகிறது. இந்த லேப்டாப் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தைப் பயனர்கள் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். இது 1366 x 768 பிக்சல்கள் கொண்ட 11.6' இன்ச் HD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

ஜியோ லேப்டாப் சிறப்பாக இருக்கிறதா? இல்லையா?

ஜியோ லேப்டாப் சிறப்பாக இருக்கிறதா? இல்லையா?

இது பட்ஜெட் சலுகை என்பதால், ஜியோ லேப்டாப் நிலையான 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட ஆதரவை வழங்குகிறது. இது டூயல் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது Wi-Fi 802.11ac அம்சத்தை ஆதரிக்கிறது. 2ஜிபி ரேம் ஒரு லேப்டாப்பிற்கு போதுமானதா என்றால், இது சந்தேகத்திற்குரியது தான். பயனர்களின் பயன்பாட்டை பொறுத்து இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் முடிவு செய்யலாம்.

யாருக்கு இந்த புதிய JioBook Laptop பெஸ்ட்டாக அமையும்?

யாருக்கு இந்த புதிய JioBook Laptop பெஸ்ட்டாக அமையும்?

கட்டாயமாக, அழுத்தமான அல்லது அதிகமான செயல்பாட்டுக்களை இந்த லேப்டாப்பில் செய்வது கடினமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், சாதனம் விற்பனைக்கு வந்தவுடன் உண்மை தெளிவாகத் தெரிந்துவிடும். ஸ்மார்ட்போன் விலையில் ஒரு லேப்டாப் சாதனத்தை வாங்க நினைப்பவர்கள் இதை ட்ரை செய்து பார்க்கலாம். குறிப்பாக மாணவர்களுக்கு இது பெஸ்டான குறைந்த விலை லேப்டாப் ஆக நல்ல அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
JioBook India 1st Budget Laptop Launched Today With Snapdragon 665 Processor in IMC 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X