சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

|

இந்த வார தொடக்கத்தில் நடந்து முடிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது ஆண்டு பொதுக் கூட்டத்தை (ஏஜிஎம்) பற்றி பெரிய அளவிலான விளக்கமோ, அறிமுகமோ தேவை இல்லை என்று நினைக்கிறோம்.

ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் ஜியோவின் 5ஜி (Jio 5G) சேவைகள் குறித்த தகவல்கள், குறிப்பிட்ட நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது ஏஜிஎம் ஆனது வழக்கத்தை விட பட்டிதொட்டி எங்கும் "கவனிக்கப்பட்டது"!

எதிர்பார்த்தது போலவே!

எதிர்பார்த்தது போலவே!

நாம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது இந்தியாவில் இந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளியன்று, புது தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் அறிமுகமாகும் என்கிற அறிவிப்பும் வெளியானது.

5ஜி மட்டுமே இந்நிகழ்வின் முக்கிய அறிவிப்பு என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால்.. நீங்கள் "குறிப்பிட்ட ஒரு விடயத்தை" சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தம்!

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

சைக்கிள் கேப்ல ஜியோ பார்த்த வேலை!

சைக்கிள் கேப்ல ஜியோ பார்த்த வேலை!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது ஏஜிஎம் நிகழ்வில், ஜியோ நிறுவனம் சைலன்ட் ஆக அதன் ஜியோபுக் (JioBook) லேப்டாப்பையும் 'டீஸ்' செய்தது.

ஆக, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜியோவின் முதல் லேப்டாப் ஆனது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது ""கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை சரியாக பாருங்கள்.. ஜியோபுக் தெரியும்!

அந்த வீடியோவை சரியாக பாருங்கள்.. ஜியோபுக் தெரியும்!

நாட்டில் அதன் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களைப் பற்றி பேசும் போது ஜியோ நிறுவனம் சத்தம் போடாமல் அதன் முதல் லேப்டாப்பை டீஸ் செய்தது.

ஜியோவின் 5ஜி சேவைகள் தொடர்பான விளக்கக்காட்சி வீடியோ ஒன்றில், பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் மேசையின் மீது ஜியோபுக் லேப்டாப் "அமர்ந்து இருக்கிறது"!

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

பட்ஜெட் விலை... பிளாஸ்டிக் பாடி..!

பட்ஜெட் விலை... பிளாஸ்டிக் பாடி..!

அதே வீடியோவில், இன்னொரு காட்சியின் போது ஜியோபுக் லேப்டாப்பை நாம் இன்னும் "நெருக்கமாக" காண முடிந்தது.

அதன் வழியாக ஜியோபுக் லேப்டாப் ஆனது பிளாஸ்டிக்பாடி உடன் வரக்கூடும் என்பதை நம்மால் அறிய முடிகிறது. ஆக பட்ஜெட் வாசிகளை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், இது மிகவும் மலிவான விலைக்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் ஜியோபுக்!

பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் ஜியோபுக்!

பேக் பேனலின் நடுவில் ஜியோ லோகோவுடன் வரும் இந்த ஜியோபுக் லேப்டாப்பை பற்றிய செய்திகள் வருவது இதுவொன்றும் முதல் முறை அல்ல.

ஜியோபுக் லேப்டாப்பின் சாத்தியமான அறிமுகம் குறித்து பல அறிக்கைகள் வெளியாகி உள்ளன! அவ்வளவு ஏன்? கடந்த காலத்தில் வெளியான லீக்ஸ் தகவல்கள் வழியாக ஜியோபுக் லேப்டாப்பின் அம்சங்கள் கூட வெளிப்படுத்தப்பட்டன.

ஜியோபுக்கில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஜியோபுக்கில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கடந்த கால அறிக்கைகளின்படி, ஜியோபுக் லேப்டாப் ஆனது 1366×768 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடன் வரும். மேலும் ஜியோ நிறுவனத்தின் இந்த முதல் லேப்டாப் ஆனது இரண்டு மாடல்களில் அறிமுகமாகும்.

ஜியோ புக் ஆனது குவால்காம் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது 2GB LPDDR4X ரேம் மற்றும் 32GB eMMC ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

மற்றொரு மாடல் ஆனது 4GB LPDDR4X ரேம் மற்றும் 64GB eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் வரலாம்.

எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 "மரண மாஸ்" பிளான்கள்!

ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஆ? விண்டோஸ் ஓஎஸ்-ஆ?

ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஆ? விண்டோஸ் ஓஎஸ்-ஆ?

சில அறிக்கைகள் ஜியோபுக் ஆனது ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன் ஃபோர்க்டு வெர்ஷனை இயக்கும் என்று கூறுகிறது, மற்றவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐ இயக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, JioBook லேப்டாப் ஆனது HDMI கனெக்டர், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றுடன் வரும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஜியோபுக் லேப்டாப் ஆனது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற 'லான்ச் டைம்லைன்' குறித்து எந்த தகவலும் இல்லை!

Photo Courtesy: 91Mobiles

Best Mobiles in India

English summary
Jio Silently Teased Company's First Laptop JioBook

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X