Home
Gadgets

மகாபிரபு இங்கயும் வந்துடீங்களா.. இனி உங்க பைக், பேக் திருடு போகாம Jio பாத்துக்கும்.. புது GPS Tracking வந்தது!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, அதன் ஜியோஃபைண்ட் சீரீஸின் கீழ் இரண்டு புதிய வயர்லெஸ் ஜிபிஎஸ் டிராக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளது: அது ஜியோஃபைண்ட் (JioFind) மற்றும் ஜியோஃபைண்ட் ப்ரோ (JioFind Pro) மாடல்கள் ஆகும்

இந்த 2 ஜியோ ஜிபிஎஸ் டிராக்கர்களையும், பயனர்கள் தங்கள் பைக் , ஸ்கூட்டர், கார் போன்ற வாகனங்களில் அல்லது ஸ்கூல் பேக்கள், டிராவல் லக்கேஜ் போன்றவைகளுடன் அல்லது வேறு எந்த பொருட்களுடனும் வைத்து அவைகளை கண்காணிக்க முடியும். இந்த 2 மாடல்களுமே ஜியோவின் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகின்றன மற்றும் ஜியோதிங்ஸ் ஆப் மூலம் இயக்கப்படுகின்றன.

இனி உங்க பைக், பேக் திருடு போகாம Jio பாத்துக்கும்!

இந்த புதிய ஜியோஃபைண்ட் சீரீஸ் டிராக்கர்கள் ஆனது நெடுஞ்சாலைகள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் நிகழ்நேர இருப்பிட கண்காணிப்பை (Real time location monitoring) வழங்குகிறது. மேலும் மாநில எல்லைகளை கடந்து நகரும் போதும் கூட கண்காணிப்பை தடையின்றி தொடரும்.

இன்னும் சுவாரசியமாக..எல்லாவற்றிற்கும் மேலாக ஜியோ நிறுவனம் இந்த டிவைஸ்களில் அதன் நம்பர் ஷேரிங் அம்சத்தை (Number sharing feature) செயல்படுத்தி உள்ளது. இதன்கீழ் இந்த டிராக்கர்கள் ஆனது பயனரின் ஸ்மார்ட்போனில் உள்ள அதே ஜியோ எண்ணை பயன்படுத்தும்; ஆக உங்களுக்கு கூடுதல் டேட்டா பிளான்களின் தேவை இருக்காது; அதற்கான செலவும் மிச்சமாகும்.

ஜியோஃபைண்ட் மற்றும் ஜியோஃபைண்ட் ப்ரோவின் மற்ற முக்கிய அம்சங்கள்: ஜியோஃபைண்ட் ஆனது 1100mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பேக்கப் வழங்கும். இது இலகுரக, பைகள் மற்றும் சிறிய பொருட்களில் பயன்படுத்த ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை வெறும் 41 கிராம் மட்டுமே ஆகும்.

மறுகையில் உள்ள ஜியோஃபைண்ட் ப்ரோ ஆனது 10000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். வாகனங்களுடன் எளிதாக இணைக்க ஒரு மேக்னட்டிக் மவுண்ட்டும் (Magnetic Mount) இதில் அடங்கும். இது ஸ்டாண்டர்ட் ஜியோஃபைண்ட் மாடலில் வழங்கப்படவில்லை.

மேலும் இரண்டு மாடல்களும் 5 ஜியோபென்ஸ்டு ஸோன்களை (Geofenced zones) செட் செய்யவும், டிராக்கர் இந்த பகுதிகளுக்குள் நுழையும் போது அல்லது வெளியேறும் போது அதுகுறித்த எச்சரிக்கைகளை பெறவும் அனுமதிக்கின்றன. கூடவே அதிக வேகம் மற்றும் குறைந்த பேட்டரிக்கான அறிவிப்புகளையும் அனுப்பும்.

இந்த ஜியோஃபைண்ட் சீரீஸ் டிராக்கர்களில் உள்ள மற்றொரு பயனுள்ள அம்சம் தொலைதூர குரல் கண்காணிப்பு (Remote voice monitoring) ஆகும். இது கூடுதல் பாதுகாப்பிற்காக சுற்றுப்புற ஒலிகளை (ambient sounds) கேட்க அல்லது குறுகிய கிளிப்களை பதிவு (record short clips) செய்ய அனுமதிக்கிறது.

ஜியோ திங்ஸ் (JioThings) ஆப் மூலம் 5 ஜியோஃபைண்ட் டிவைஸ்களை ஒரு ஜியோ எண்ணுடன் இணைக்க முடியும். இந்த டிவைஸ்கள் ஒரு சிம் கார்டுடன் வருகின்றன. மேலும் செயலில் உள்ள ஜியோ டேட்டா திட்டத்துடன் மட்டுமே பயன்படுத்தும் படி லாக் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஜியோஃபைண்ட் டிராக்கர் சீரீஸில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால் இது டைப் ஏ டூ டைப் சி கேபிள்கள் (Type A to C cables) வழியாக மட்டுமே சார்ஜிங் ஆகும். டைப் சி டூ டைப் சி கேபிள்களுக்கு (Type C to C cables) இணக்கமானதாக இல்லை.

விலை விவரங்கள்: ஸ்டாண்டர்ட் ஜியோஃபைண்ட் டிராக்கர் ஆனது ரூ.1499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னரே குறிப்பிட்டபடி இதன் எடை 41 கிராம் ஆகும் . மறுகையில் 297 கிராம் எடை உடன் வரும் ஜியோஃபைண்ட் ப்ரோ டிராக்கர் ஆனது ரூ.2499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த இரண்டு டிராக்கர்களும் பிளாக் கலரில் வாங்க கிடைக்கின்றன மற்றும் ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகின்றன. மேலும் 2 மாடல்களுமே முதல் வருடத்திற்கு இலவச சேவையை வழங்கும். அதன் பிறகு வருடாந்திர புதுப்பித்தல் கட்டணம் ரூ. 599 பொருந்தும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio New GPS Trackers JioFind JioFind Pro Launched Helps Bike Bags From Stealing Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X