Home
Gadgets

கார் ஓனர்களை கவுத்த அம்பானி.. பெட்ரோல், டீசல் போடும் விலைக்கு Jio GPS டாஷ்கேம் அறிமுகம்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான - இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவானது (Reliance Jio) அமைதியாக, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் - ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. அது ஜிபிஎஸ் (GPS) ஆதரவு உடன் கூடிய ஜியோஐக்யூ டேஷ்கேம் (JioEyeQ Dashcam) ஆகும்

இது கார்களுக்கான - கார் வைத்து இருப்பவர்களுக்கான - ஒரு தயாரிப்பு ஆகும். இந்தியாவில் டாஷ்கேம் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. பெரும்பாலான கார் ஓனர்கள், டாஷ்கேம் ஒன்றை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் மெல்ல மெல்ல புரிந்து கொண்டு வருகின்றனர். ஆக சரியான நேரத்தில் தான் ஜியோ இந்த அறிமுகத்தை செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் போடும் விலைக்கு Jio GPS டாஷ்கேம் அறிமுகம்!

டாஷ்கேம் என்பது வெறுமனே உங்கள் காரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்வதில் உதவுவது மட்டுமல்லாமல், விபத்து ஏற்பட்டால் காப்பீட்டை கோர விரும்பும் போது, ஒரு வழக்கைத் தீர்க்கவும் உதவுகிறது. அப்படியாக - ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோஐக்யூ டேஷ்கேமில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அதென்ன அம்சங்கள்? இதன் விலையென்ன? எங்கே வாங்குவது? இதோ விவரங்கள்:

ஜியோ ஜியோஇக்யூ டேஷ்கேம் முக்கிய அம்சங்கள்: ரிலையன்ஸ் ஜியோ ஜியோஇக்யூ டேஷ்கேம் ஆனது புல் எச்டி 2எம்பி கேமராவுடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது ஜிபிஎஸ் ஆதரவுடன் வருகிறது. இது 140-டிகிரி அல்ட்ராவைடு பீல்ட் ஆப் வியூ மற்றும் ஏஐ அடிப்படையிலான பாதசாரிகளை கண்டறியும் ஆதரவையும் (AI Pedestrian Detection Supportt) கொண்டுள்ளது.

கூடவே இது நைட் விஷன் ஆதரவையும் கொண்டுள்ளது. இதில் 32 ஜிபி அளவிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்டோரேஜும் உள்ளது. எமர்ஜென்சி ரெக்கார்ட் (emergency recording) அம்சமும் உள்ளது. மேலும், மோதலை கண்டறியும் (collision detection) அம்சமும் உள்ளது. இந்த் 2 அம்சங்களும் உண்மையிலே மிகவும் அருமையான மற்றும் மிகவும் முக்கியமான டாஷ்கேம் அம்சங்கள் ஆகும்

மேலும் ஜியோஇக்யூ டேஷ்கேம் ஆனது உள்ளமைக்கப்பட்ட வைஃபை மற்றும் மைக் உடனும் வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகையான டிவைஸ்களுக்குமே இணக்கமானதாக செயல்படும் ஜியோதிங்ஸ் ஆப் உடன் ஜியோஇக்யூ டேஷ்கேம் ஆனது நன்றாக வேலை செய்யும்.

ஜியோஐக்யூ டேஷ்கேமின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ரூ.3,499 க்கு அதன் ஜியோஐக்யூ டேஷ்கேமை வழங்குகிறது. இது ஏற்கனவே பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. மேலும் பயனர்கள் இதை நேரடியாக ரூ.3499 செலுத்தியும் வாங்கலாம் அல்லது மூன்று மாத நோ-காஸ்ட் இஎம்ஐவிருப்பத்தின் கீழும் வாங்கலாம், இதற்கு மாதத்திற்கு ரூ.1,166 செலவாகும்.

VERDICT: வாங்கலாமா? வேண்டாமா? ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த தயாரிப்பில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு நன்மை என்னவென்றால், இது மார்கெட்டிற்கு ஏற்ற நல்ல விலையில் வருகிறது. பெரும்பாளான டாஷ்கேம்கள் மலிவானவை அல்ல, அனால் அவைகள் மிகவும் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகிறது. எனவே உங்கள் காருக்கு ஒரு டேஷ்கேமை வாங்குவதை உங்களால் புறக்கணிக்கவே முடியாது.

குறிப்பாக நீங்கள் உங்கள் காரையும் காப்பீட்டு பணத்தையும் மதிக்கிறீர்கள் என்றால் - நிச்சயம் புறக்கணிக்க முடியாது. அதனுடன், சில நேரங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கவும், கார் எங்கே இருக்கிறது என்பதை தொடர்ந்து சரிபார்க்கவும் நீங்கள் விரும்புகீர்கள், ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோஐக்யூ டேஷ்கேமில் - மேற்கண்ட அனைத்தும் சாத்தியமாகும்.

Best Mobiles in India

English summary
Jio Launched JioEyeQ Dashcam with GPS Night Vision Support 32GB Storage See Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X