டக்குனு ஆர்டர் போடுங்க.! ரொம்ப வேகமா விற்று தீரும் Jio Book லேப்டாப்.! சலுகை கூட இருக்கு.!

|

ஜியோ புக் லேப்டாப் (Jio Book) இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸில் அறிமுக செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடும் முதல் லேப்டாப் மாடல் இதுவாகும்.

குறைந்த விலையில் சிறப்பான தயாரிப்பை வழங்கி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஜியோவிற்கு நிகராக வேற எந்த நிறுவனத்தையும் நம்மால் சுட்டிக்காட்ட முடியாது.

கம்மி விலையில் இப்படி ஒரு லேப்டாப்-ஆ.! தூள் பறக்கும் Jio Book Laptop.!

கம்மி விலையில் இப்படி ஒரு லேப்டாப்-ஆ.! தூள் பறக்கும் Jio Book Laptop.!

கம்மி விலையில் ஜியோ ஆண்ட்ராய்டு போன் (Jio Android Phone) அறிமுகம் செய்த பிறகு, நிறுவனம் இப்போது குறைந்த விலையில் ஒரு பெஸ்டான லேப்டாப்பை (Jio Laptop) அறிமுகம் செய்துள்ளது. அதை, இப்போது இந்தியாவில் விற்பனைக்கும் கொண்டுவந்துள்ளது.

IMC நிகழ்வில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, இது முழுமையான விவரங்களுடன் அரசாங்க இ-மார்க்கெட்ப்ளேஸ் (GeM) வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வந்தது.

JioBook லேப்டாப் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வாங்க கிடைத்ததா?

JioBook லேப்டாப் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வாங்க கிடைத்ததா?

இந்த லேப்டாப், அரசு இணையதளமான ஜிஇஎம் (GeM) இணையதளம் வழியாக வாங்க கிடைத்தது.

இந்த அரசிற்குச் சொந்தமான மார்க்கெட்டிங் பிளேஸில், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த Jio Book லேப்டாப் வாங்க கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு, இது அப்போது அணுக கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது ஒரு வழியாக இந்த ஜியோ புக் லேப்டாப் இப்போது பொது விற்பனைக்கு வந்துள்ளது.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

அரசாங்க வெப் சைட்டில் அதிக விலை.. ஆனால் இப்போது.!

அரசாங்க வெப் சைட்டில் அதிக விலை.. ஆனால் இப்போது.!

அதுவும், மற்ற ஆன்லைன் வெப்சைட்களில் வழியாக இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) இ-காமர்ஸ் இணையதளம் வழியாக இப்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஆம், இன்று முதல் Jio Book லேப்டாப் டிவைஸை நீங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைத்தளம் வழியாக வாங்கலாம்.

அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Jio Book லேப்டாப் இல்லை ரூ.19,500 ஆக இருக்கிறது.

உங்களுக்குக் கிடைத்த லக்கி சான்ஸ் இது தான்.!

உங்களுக்குக் கிடைத்த லக்கி சான்ஸ் இது தான்.!

ஆனால், உங்களுக்குக் கிடைத்த லக் என்று கூட இதை நீங்கள் நினைத்துக்கொள்ளலாம், காரணம், இப்போது ஜியோ புக் லேப்டாப் ரூ.19,500 என்ற அறிமுகம் விலையை விட இன்னும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டலில் கிடைக்கும் ஜியோ புக் விலை ரூ. 15,799 ஆக இருக்கிறது.

இதற்கு மேல், உங்களுக்கு சில வங்கிகளின் சலுகை மற்றும் பிரத்தியேகமான தள்ளுபடிகளும் கிடைக்கின்றது என்பதை மறக்காதீர்கள்.

இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

லேட் செய்யாமல் உடனே Jio Book ஆர்டர் செய்யுங்கள்.!

லேட் செய்யாமல் உடனே Jio Book ஆர்டர் செய்யுங்கள்.!

வெறும் ரூ.15,799 விலையில் நிறுவனம் இப்படி ஒரு லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்து, மாணவர்களை குறிவைத்துக் கவர்ந்திழுக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில், லேப்டாப் டிவைஸ் கிடைப்பதனால், இப்போதே Jio Book லேப்டாப்பிற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது.

உங்களுக்கும் ஒரு புது லேப்டாப் வேண்டும் என்றால், லேட் செய்யாமல் உடனே Jio Book லேப்டாப்பை ஆர்டர் செய்யுங்கள்.

ஜியோ இந்த லேப்டாப் மீது என்னென்ன சலுகைகளை வழங்குகிறது

ஜியோ இந்த லேப்டாப் மீது என்னென்ன சலுகைகளை வழங்குகிறது

ரிலையன்ஸ் டிஜிட்டலில் கிடைக்கும் ஜியோ புக் லேப்டாப்பின் விலை 15,799 ரூபாயாக இருக்கிறது.

இந்த விலையை நீங்கள் குறைக்க விரும்பினால், உங்களிடம் இருக்கும் Axis, Kotak, ICICI, HDFC, AU, INDUSIND, DBS, Yes பேங்க் போன்ற பிற முக்கிய வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்.

இதன் மூலம் ஜியோ புக் லேப்டாப் இன் விலையை ரூ. 14,000 விலை வரம்பு வரை உங்களால் குறைக்க முடியும்.

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

ஜியோ புக் லேப்டாப் சிறப்பம்சம்

ஜியோ புக் லேப்டாப் சிறப்பம்சம்

ஜியோ புக் லேப்டாப் 1366 × 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 11.6' இன்ச் HD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 64 பிட் ஆக்டா-கோர் சிப் மூலம் இயக்கப்படும் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அட்ரினோ 610 ஜிபியுவுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் என்பது கவனிக்கத்தக்கது.

இது 2GB RAM மற்றும் 32GB eMMC ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 128GB வரை எக்ஸ்பென்ட் செய்யக் கூடியது.

தரமான பேட்டரி.. சும்மா நின்னு பேசும்.! எவ்வளவு மணி நேரம் தெரியுமா?

தரமான பேட்டரி.. சும்மா நின்னு பேசும்.! எவ்வளவு மணி நேரம் தெரியுமா?

இந்த லேப்டாப் JioOS இல் இயங்குகிறது. இது சிறந்த செயல்திறனுக்காக மிகவும் உகந்ததாகவும் இலகுரகதாகவும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய ஜியோ ஆப்ஸ் ஸ்டோர் லேப்டாப் உடன் வருகிறது.

ஜியோ புக் லேப்டாப்பின் 55.1 முதல் 60 AH பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 8+ மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

JioBook லேப்டாப் இல் சிம் செயல்பாட்டை எப்படி ஆக்டிவேட் செய்வது?

JioBook லேப்டாப் இல் சிம் செயல்பாட்டை எப்படி ஆக்டிவேட் செய்வது?

ஓவர் ஹீட்டிங் சிக்கலை எதிர்கொள்ள இந்த லேப்டாப் கூலிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் இது 4G LTE (Jio மட்டும்), புளூடூத் 5.0, 1 HDMI மினி, Wi-Fi மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இதில் 1.0W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 2MP வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சிம் செயல்பாட்டை உறுதி செய்ய, வாடிக்கையாளர்கள் ICCID விபரங்களை அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்குச் சென்று, KYC சப்மிட் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio Book Laptop Is Now Available For Purchase Via Reliance Digital Website

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X