இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சம்?

|

ஜெபிஎல் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்பீக்கர் தனித்துவமான வடிவமைப்பில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும்

தற்சமயம் இந்நிறுவனம் இந்தியாவில் ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும்மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் ரெபரன்ஸ் மாணிட்டர்கள் தெளிவான ஆடியோவை வழங்கும்.

ஸ்மார்ட் அம்சங்கள்

மேலும் ப்ளூடூத், ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அடிப்படையாக கொண்டு ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர்கள்வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மாணிட்டர்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.! பயனர்கள் மகிழ்ச்சி.!சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.! பயனர்கள் மகிழ்ச்சி.!

மாணிட்டர்களில் கோ-

இந்த புதிய ரெபரன்ஸ் மாணிட்டர்களில் கோ-ஆக்சிக்கல் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்பு இவற்றுடன் லோ - ஃபிரீக்வன்சி வூஃபர் மற்றும் மென்மையான டோம் ட்வீட்டர் வழங்கப்பட்டுள்ளன. இவை சரியான ஃபிரீக்வன்சியை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரெபரன்ஸ் மாணிட்டர்களில் சக்திவாய்ந்த 60வாட் கிளாஸ் டி பவர் ஆம்பிளஃபையர் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவை
ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் 30வாட் அளவில் தெளிவான இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு மாடல்களிலும் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, முன்புறம் பேனல் இன்புட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த

குறிப்பாக பயனர்கள் ப்ளூடூத், ஆக்ஸ், ஆர்சிஏ மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும், மேலும்இந்த சாதனங்களின் முன்புறம் வால்யூம் கண்ட்ரோல்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் 1/4 இன்ச் பேலன்ஸ்டு, டூயல் ஆர்சிஏ, சிங்கிள் 1/8 இன்ச் இன்புட் ,ப்ளூடூத் வழங்கப்பட்டு இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம்.! வருகிறது தரமான சியோமி சாதனம்.!இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம்.! வருகிறது தரமான சியோமி சாதனம்.!

104 பிடிடபிள்யூ ரெபரன்ஸ்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஜெபிஎல் ஒன் சீரிஸ் 104 பிடி மற்றும் 104 பிடிடபிள்யூ ரெபரன்ஸ் மாணிட்டர்களின் விலை ரூ. 11499-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனங்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
JBL One Series 104-Bt Desktop Reference Monitors Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X