சொன்னா நம்பமாட்டீங்க.. ஆரம்பமே முழுசா ரூ.11,000 தள்ளுபடி.. விற்பனைக்கு வந்த டச் டிஸ்பிளே JBL இயர்பட்ஸ்..
ஜேபிஎல் (JBL) நிறுவனம் அதன் ஆடியோ தயாரிப்பு சாதனங்களின் (Audio Product Devices) வரிசையில் புதிதாக டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் (Touch Screen Display) கூடிய ஒரு புதிய TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதை JBL நிறுவனம் ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) என்ற பெயருடன் அறிமுகம் செய்திருந்தது. இதன் விற்பனையை நிறுவனம் இன்று இந்தியாவில் ரூ. 11,000 தள்ளுபடியுடன் துவங்கியுள்ளது. டிஸ்பிளேவுடன் இயங்கும் இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் விலை மற்றும் முழு விபர தகவலை இப்போது பார்க்கலாம்.
ஜேபிஎல் நிறுவனம் கடந்த மாதத்திற்கு முன்பு ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்தது. இது இப்போது இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆரம்ப விற்பனையே அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக JBL நிறுவனம் இந்த வித்தியாசமான டச் டிஸ்பிளேவுடன் கூடிய இயர்பட்ஸ் (Touch display earbuds) சாதனம் மீது நம்ப முடியாத அளவில் ரூ. 11,000 விலையை தள்ளுபடி செய்து விற்பனையை அறிவித்துள்ளது.

டச் டிஸ்பிளேவுடன் ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds With Touch Display):
ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) சாதனம் 10mm டைனமிக் டிரைவர் (10mm dynamic drivers) உடன் ஜேபிஎல் சிக்னேச்சர் ஆடியோ (JBL signature) அம்சத்தை வழங்குகிறது. இது 48 மணி நேர பிளேபேக் நேரத்தை (48 hours playback) வழங்குகிறது. நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் இது 40 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்று JBL நிறுவனம் கூறியுள்ளது.
இது 15 நிமிட பாஸ்ட் சார்ஜிங் உடன் 4 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் கஸ்டமைஸ் ஸ்மார்ட்கேஸ் கண்ட்ரோல் (customizable SmartCase control) உடன் வருகிறது. இது டச் டிஸ்பிளேவுடன் சார்ஜிங் கேஸ் (display charging case earbuds) டிவைஸை வழங்குகிறது. இதில் நீங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே பாடல்களை கேட்கலாம், ஸ்மார்ட்போன் அழைப்பு, நோட்டிபிகேஷன் போன்றவற்றை சார்ஜிங் கேஸ் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இந்த சாதனம் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-res audio), அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (adaptive noise cancellation), 3D ஸ்பேஷியல் ஆடியோ (3D spatial audio) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது 6 மைக்ரோபோன் (Microphone) உடன் மிகவும் துல்லியமான ஆடியோ அழைப்பு அம்சத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) அம்சத்துடன் அட்டகாசமான பேரிங் ஆதரவை வழங்குகிறது.
ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் விலை (JBL Live Beam 3 Earbuds Price):
இந்த புதிய ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) சாதனம் பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் க்ரேய் (Grey) நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. டச் டிஸ்பிளேவுடன் ஒரு தனித்துவமான TWS இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க விரும்பினால், நீங்கள் இந்த ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் டிவைஸை வாங்கி மகிழலாம். இதன் விலை உண்மையில் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
JBL இந்திய வலைத்தளம் பக்கம் வழியாக இப்போது இது வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் விலை (JBL Live Beam 3 Earbuds Price) ரூ. 24,999 என்று அசல் விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக இதன் மீது ரூ.11,000 தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது இந்த இயர்பட்ஸ் வெறும் ரூ. 13,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








