டச் டிஸ்பிளே Earbuds.. 48 மணிநேர பிளே டைம்.. JBL சிக்னேச்சர் ஆடியோ.. இந்தியாவில் இதன் விலை என்ன?
ஜேபிஎல் (JBL) நிறுவனம் அதன் ஆடியோ தயாரிப்பு சாதனங்களின் (Audio Product Devices) வரிசையில் புதிதாக டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் (Touch Screen Display) புதிய TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜேபிஎல் நிறுவனம் இதை ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் இந்திய சந்தையில் கிடைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை இந்தியாவில் என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இங்கே.
ஜேபிஎல் நிறுவனம் சமீபத்தில் நடந்த சிஇஎஸ் 2024 (CES 2024) நிகழ்வில் ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் சாதனத்தை வெளிப்படுத்தியது. இது இப்போது விரைவில் இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வித்தியாசமான டச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ள இயர்பட்ஸ் (Touch display earbuds) சாதனம் பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்போது பார்க்கலாமா?

ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds):
ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) சாதனம் 10mm டைனமிக் டிரைவர் (10mm dynamic drivers) உடன் ஜேபிஎல் சிக்னேச்சர் ஆடியோ (JBL signature) அம்சத்தை வழங்குகிறது. இது 48 மணி நேர பிளேபேக் நேரத்தை (48 hours playback) வழங்குகிறது. நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் இது 40 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்று JBL நிறுவனம் கூறியுள்ளது.
இது அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் JBL இந்திய வலைத்தளம் பக்கங்களில் இப்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் விலை (JBL Live Beam 3 Earbuds Price) ரூ. 24,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது அமேசான் வழியாக சலுகையுடன் வெறும் ரூ. 20,000 விலைக்குள் வாங்க கிடைக்குமென்று லீக் தகவல்கள் கூறுகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) அம்சத்தையும் வழங்குகிறது.
இது 15 நிமிட சார்ஜிங் உடன் 4 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் கஸ்டமைஸ் ஸ்மார்ட்கேஸ் கண்ட்ரோல் (customizable SmartCase control) உடன் வருகிறது. இது டச் டிஸ்பிளேவுடன் சார்ஜிங் கேஸ் (display charging case earbuds) டிவைஸை வழங்குகிறது. இதில் நீங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே பாடல்களை கேட்கலாம், ஸ்மார்ட்போன் அழைப்பு, நோட்டிபிகேஷன் போன்றவற்றை சார்ஜிங் கேஸ் மூலம் அறிந்துகொள்ளலாம்.
டச் டிஸ்பிளேவுடன் 48 மணிநேர பிளேபேக் டைம் JBL இயர்பட்ஸ் விலை என்ன?
இந்த சாதனம் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-res audio), அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (adaptive noise cancellation), 3D ஸ்பேஷியல் ஆடியோ (3D spatial audio) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது 6 மைக்ரோபோன் (Microphone) உடன் மிகவும் துல்லியமான ஆடியோ அழைப்பு அம்சத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) அம்சத்துடன் அட்டகாசமான பேரிங் ஆதரவை வழங்குகிறது.
இந்த புதிய ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் (JBL Live Beam 3 Earbuds) சாதனம் பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் க்ரேய் (Grey) நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. டச் டிஸ்பிளேவுடன் ஒரு தனித்துவமான TWS இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க விரும்பினால், நீங்கள் இந்த ஜேபிஎல் லைவ் பீம் 3 இயர்பட்ஸ் டிவைஸை வாங்கி மகிழலாம். இது இந்தியாவில் ரூ. 20,000-திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








