பார்க்க தான் குட்டி.. சவுண்டு தெறிக்கும் பட்டித்தொட்டி.. JBL Horizon 3 Mini ஸ்பீக்கர் அறிமுகம்.. என்ன விலை?
2025 ஆம் ஆண்டின் முதல் பெரிய டெக் ஈவென்ட் ஆன சிஇஎஸ் 2025 (CES 2025) நிகழ்வில், ஜேபிஎல் நிறுவனமானது அதன் ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கர் (JBL Horizon 3 Mini Speaker) உட்பட பல பல புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது. அப்படி என்னென்ன ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? அவைகளின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயங்கள் என்ன? இதோ விவரங்கள்:
சிஇஎஸ் 2025 நிகழ்வில் - ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கர், ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் 520 ஸ்பீக்கர் (JBL PartyBox 520), ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் 2 ஸ்பீக்கர் (JBL PartyBox Encore 2), மற்றும் ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசன்ஷியல் 2 (JBL PartyBox Encore Essential 2) ஸ்பீக்கர் என மொத்தம் 4 புதிய ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இவைகளில் ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கர் ஜேஆனது டூயல் பாஸிவ் ரேடியேட்டர்களுடன் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஸ்டீரியோ சவுண்ட்டை வழங்குவதாக கூறப்படுகிறது. இதனுடன் அறிமுகமான லேட்டஸ்ட் பார்ட்டிபாக்ஸ் ஸ்பீக்கர்கள் ஆனது 400W வரையிலான அவுட்புட் பவரை வழங்குகின்றன மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கை பெற்றுள்ளன.
ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கரின் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இது ஜேபிஎல் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஸ்டீரியோ சவுண்ட் அனுபவத்தை வழங்க உதவும் டூயல் பாசிவ் ரேடியேட்டர்களுடன், இரண்டு 1.5-இன்ச் முழு அளவிலான டிரான்ஸ்யூசர்களுடன் வருகிறது.
மேலும் இந்த மினி ஸ்பீக்கர் ப்ளூடூத் 5.3 மற்றும் ஆராகாஸ்ட் கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது. அறியாதோர்களுக்கு ஆராகாஸ்ட் என்பது மல்டிபிள் ஸ்பீக்கர் கனெக்டிவிட்டியை அனுமதிக்கிறது. மேலும் இந்த ஸ்பீக்கரில் சுற்றுப்புற ஒளிகள், இயற்கையால் ஈர்க்கப்பட்ட ஒலிகள் மற்றும் சன்ரைஸ் அலாரத்துடன் சர்க்காடியன் ரிதம்களை ரெகுலேட் செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கர் ஆனது ஜேபிஎல் ஒன் ஆப் உடன் இணக்கமாக செயல்படும். இதன்கீழ் பயனர்கள் டூயல அலாரங்கள், இக்யூ செட்டிங்ஸ் மற்றும் லைட்டிங் ஆகியவற்றை மேனேஜ் செய்ய முடியும். கடைசியாக இந்த ஸ்பீக்கர்யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது.
ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் 520, ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் 2, ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் இன்சென்ஷியல் 2 ஸ்பீக்கர்களின் அம்சங்கள்: ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் 520 மற்றும் ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் 2 மற்றும் பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசென்ஷியல் 2 ஆகிய 3 ஸ்பீக்கர்களுமே ப்ளூடூத் 5.4 இணைப்பை ஆதரிக்கின்றன.
மேலும் ஏஐ பூஸ்டட் சவுண்ட் அனுபவத்தை வழங்குவதோடு, ஆராகாஸ்ட் ஆதரவுடன் மல்டி-ஸ்பீக்கர் இணைப்பையும் ஆதரிக்கின்றன. ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் ஆப் உடன் இணக்கமான இந்த இந்த லேட்டஸ்ட் ஸ்பீக்கர்கள் (முன்னரே குறிப்பிட்டபடி) ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்4-ரேட்டட் கட்டமைப்பை கொண்டுள்ளன.
பார்ட்டிபாக்ஸ் 520 ஸ்பீக்கர் ஆனது 400W அவுட்புட் பவரை வழங்குகிறது மற்றும் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது. பார்ட்டிபாக்ஸ் என்கோர் 2 ஸ்பீக்கர் ஆனது பில்ட்இன் டூ-மைக் சேனல் ரிசீவர் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் மைக்குகளுக்கான ஆதரவுடன் வருகிறது மற்றும் நீக்கக்கூடிய ஹோல்டரைக் கொண்டுள்ளது.
பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசென்ஷியல் 2 ஸ்பீக்கர் ஆனது பில்ட்இன் கிட்டார் மற்றும் மைக் இன்புட்டை கொண்டுள்ளது. இவ்விரு ஸ்பீக்கர்களும் 100W அவுட்புட் லெவலை ஆதரிக்கின்றன. இவைகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
விலை விவரங்கள்: ஜேபிஎல் ஹொரைசன் 3 மினி ஸ்பீக்கர் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.12,400 க்கும், ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் 520ஸ்பீக்கர் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.68,600 க்கும், ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் 2 ஸ்பீக்கர் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34,300 க்கும் மற்றும் ஜேபிஎல் பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசென்ஷியல் 2 ஸ்பீக்கர் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.25,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








