இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
ஜெபிஎல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருப்பதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 என மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது ஜெபிஎல் நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று சாதனங்களும் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 சாதனங்களில் ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், தரமான ஆடியோ என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இந்த சாதனங்களின் தனித்தனி சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2
ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2 சாதனம் ஆனது பார்டிபூஸ்ட் தொழில்நுட்பம் கொண்டு மேம்பட்ட பேஸ் அனுபவத்தை கொடுக்கிறது. பின்பு இரண்டு ஸ்பீக்கர்கள் தரும் ஒலியை இந்த ஒரே சாதனம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் பில்ட்-இன் பவர் பேங்க் வசதி உள்ளது. மேலும் ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2 சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் பேக்கப் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெபிஎல் கோ 3
ஜெபிஎல் கோ 3 சாதனம் ஆனது 4.2 வாட் பவர் அவுட்புட், வாட்டர் ரெசிஸ்டண்ட், ப்ளூடூத் 5.1 வசதிகளை கொண்டுள்ளதால் இதை அனைத்து இடங்களுக்கு எளிமையாக எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். பின்பு காம்பேக்ட் டிசைன் உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். பின்பு யுஎஸ்பி டைப் சி முறையில் சார்ஜ் ஆகும் இந்த சாதனம் ஐந்து மணி நேரம் பேக்கப் வழங்குகிறது.
ஜெபிஎல் க்ளிப் 4
ஜெபிஎல் க்ளிப் 4 சாதனம் ஆனது வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகளை கொண்டுள்ளது. பின்பு அல்ட்ரா-போர்டபிள் டிசைன் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட கேராபைனர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஜெபிஎல் க்ளிப் 4 வயர்லெஸ் ஸ்பீக்கர். குறிப்பாக இந்த சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பேக்கப் கொடுக்கும்.

மூன்று ஆடியோ சாதனங்களின் விலை
ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2 சாதனத்தின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.
ஜெபிஎல் க்ளிப் 4 சாதனத்தின் விலை ரூ.4499-ஆக உள்ளது.
ஜெபிஎல் கோ 3 சாதனத்தின் விலை ரூ.3999-ஆக உள்ளது.
மேலும் இந்த சாதனம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications