அடிச்சான் பாரு ஐடெல்.. ரூ.11,999 க்கு 7000mAh பேட்டரி டேப்லெட்.. 10W பாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனத்தின் மலிவு விலை டேப்லெட் மாடலான ஐடெல் விஸ்டாடேப் 30 (itel VistaTab 30) வெளியாகி இருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுப்பது மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், 11 இன்ச் டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 டேப்லெட்டின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.10,000 மற்றும் ரூ.15,000 பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான 5ஜி ஸ்மார்ட்போன்களை ஐடெல் நிறுவனம் களமிறக்கி வருகிறது. இப்போது, அதே பட்ஜெட்டில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய தொடங்கி இருக்கிறது. இப்போது, ஐடெல் விஸ்டாடேப் 30 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஐடெல் விஸ்டாடேப் 30 அம்சங்கள் (itel VistaTab 30 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core UNISOC T606) சிப்செட்டை இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடல் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுத்துள்ளது. 4ஜி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.
ஆகவே, 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது.
8 எம்பி பிரைமரி கேமராவை இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடல் கொடுத்துள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 5 எம்பி செல்பீ கிடைக்கிறது. டிஸ்பிளே மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களை பார்க்க முடிகிறது. ஏனென்றால், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் மீடியமாக இருக்கின்றன.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, 8 எம்எம் தடிமன் மற்றும் 550.5 கிராம் எடை கொடுக்கிறது. ஹேண்டில் செய்ய காம்பாக்ட் பாடி கொடுத்துள்ளது. ஸ்லிம் மாடலாக டேப்லெட்டை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடல் பக்காவாக இருக்கும். வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற கனெக்டிவிட்டிகள் உள்ளன.
மேலும், 4ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, சிம் சிலாட் (SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைத்துள்ளது. இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடலில் ஏஐ பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஆகவே, ஏஐவானா (Aivana) என்னும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கிடைக்கிறது. இதில் சாட்ஜிபிடி இன்டிகிரேஷன் கிடைக்கிறது.
மேலும், மல்டி ஸ்கிரீன் (Multi Screen), ஐபல்ஸ் கிட்ஸ் ஸ்பேஸ் (iPulse Kids Space) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களுடன் ஸ்பேஸ் கிரே (Space Grey), ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடலின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது.
மேலும், ரூ.1,999 மதிப்புள்ள லெதர்பேக் கவருடன் கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கவில்லை. ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்க இருக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களில் ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம். மலிவான விலைக்கு டேப்லெட் வேண்டுமானால், இந்த ஐடெல் விஸ்டாடேப் 30 மாடலுக்கு செல்லலாம்.


Click it and Unblock the Notifications








