காந்தி கைக்கடிகாரமா இது? கழுத்துக்கும் கைக்கும் ஒரே Smartwatch.. இலவச கோல்டு செயினுடன் itel புது டிவைஸ்..
ஐடெல் (itel) நிறுவனம் புதிதாக ஒரு 2-இன்-1 ஸ்மார்ட்வாட்ச் (2-in-1 Smartwatch) சாதனத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம் இதை நீங்கள் கையில் வாட்ச் போல அணிந்துகொள்ளலாம் அல்லது கழுத்தில் நெக்லஸ் போலவும் அணிந்துகொள்ளலாம். இதன் விபரத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்தியாவின் சொந்த பிராண்ட்டான (Made in India) ஐடெல் நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தான் இந்த புதிய ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் (itel Unicorn Pendant Smartwatch). இது வழக்கமான ஸ்மார்ட்வாட்ச் போலவும் பயன்படுத்தக் கூடியது, மறுபுறம் கழுத்தில் செயின் உடன் வரும் டாலர் போல அணியும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் (itel Unicorn Pendant Smartwatch):
இதை பார்ப்பதற்கு காந்தியின் கைக்கடிகாரம் போலவும் காட்சியளிக்கிறது. காந்தியின் கைக்கடிகாரம் (Gandhi's pocket watch) முற்களுடன் கிளாசிக் ரவுண்ட் டயல் டிஸைனுடன் இருப்பது போலவே இதுவும் காட்சியளிக்கிறது. ஆனால், இது 200 DIY கிளவுட் வாட்ச் ஃபேஸ் ஸ்டூடியோ (DIY cloud watch face studio) அம்சத்துடன் முழுமையான ஒரு டிஜிட்டல் ஸ்மார்ட்வாட்ச் (digital smartwatch) சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் (itel Unicorn Pendant Smartwatch) சாதனத்தின் விலை என்ன? இதை எப்போதிலிருந்து ஆர்டர் செய்து வாங்கலாம்? இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம். ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.43" இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவுடன் (display) வருகிறது. இது 500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் மிகவும் துடிப்பான டிஸ்பிளேவை வழங்குகிறது.
இந்த itel ஸ்மார்ட்வாட்ச் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (always-on-display) ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் DIY கிளவுட் வாட்ச் ஃபேஸ் ஸ்டூடியோ மூலம் கஸ்டமைஸ் செய்துகொள்ள கூடிய 200+ வாட்ச் ஃபேஸ் உடன் வருகிறது. இதன் வட்ட டயல் வடிவமைப்புடன் நிறுவனம் டைனமிக் கிரௌன் பட்டன் (Dynamic crown button) மற்றும் 2 கூடுதல் பட்டன்களை (additional button) வழங்கியுள்ளது.

ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை (itel Unicorn Pendant Smartwatch Price):
இது ப்ளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth v5.3) ஆதரவுடன் இயங்கும் அட்வான்ஸ்டு சிங்கிள் சிப் ப்ளூடூத் கால்லிங் (Advanced Single Chip BT Calling) ஆதரவை கொண்டுள்ளது. இந்த புதிய பெண்டண்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice assistant) அம்சத்துடன் வருகிறது. இது தவிர இதில் வழக்கமா ஹெல்த் மானிட்டரின் அம்சங்களும் (health monitoring features) இடம்பெறுகின்றன.
இத்துடன் கூடுதலாக மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல்,(Music & camera control), ஃபைண்ட் மை போன் (Find my phone), வெதர் ரிப்போர்ட் (weather report), SpO2, 24×7 ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart rate monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress), பெண்களுக்கான ஆரோக்கியம் (Female health), தண்ணீர் குடிக்கும் நினைவூட்டல் (Water reminder) போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆதரிக்கிறது.
புதிய ஐடெல் யுனிகார்ன் பெண்டன்ட் ஸ்மார்ட்வாட்ச் (itel Unicorn Pendant Smartwatch) இந்தியாவில் ரூ. 2899 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இப்போது லெதர் ஸ்ட்ராப் மற்றும் பெண்டண்ட் செயின் உடன் வருகிறது. இது ஸ்மார்ட்வாட்ச் பாக்ஸ் உடன் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சாதனம் Dark Chrome மற்றும் Champagne Gold நிறங்களில் மே 18, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








