Home
Gadgets

இவ்ளோ கம்மி விலைக்கு.. கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 100 ஸ்போர்ட்ஸ் மோட், 200 வாட்ச் ஃபேஸ்-ஆ.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் புதிய மாடல் ஆக ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்சை (Itel Unicorn Max Smart Watch) அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களை கொண்டு வரும் ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

ஐடெல் நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் புதிய மாடல் ஆக ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களை கொண்டு வரும் ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

100 ஸ்போர்ட்ஸ் மோட், 200 வாட்ச் ஃபேஸ்-ஆ.. எந்த ஸ்மார்ட் வாட்ச்?

ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் முக்கிய அம்சங்கள்: இதன் முக்கிய சிறப்பம்சங்களில் - கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே (Curved AMOLED screen), ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (100+ sports modes) ஆகியவைகளை குறிப்பிட்டு கூறலாம்.

Take a Poll

ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.43-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மிகவும் பிரகாசமான 1000 பீக் ப்ரைட்னஸ்-ஐயும் கொண்டுள்ளது; இது நேரடி சூரிய ஒளியில் கூட தெளிவான தெரிவுநிலையை உறுதி செய்கிறது.

ஷார்ட் வீடியோ வாட்ச் முகங்கள் உட்பட இது 200 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்களுடன் வரும் ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் மூன்று பன்க்ஷனல் பட்டன்கள் உள்ளது. இதில் நேவிகேஷனுக்கான க்ராவுன், ஒரு ஸ்போர்ட்ஸ் மோட் பொத்தான் மற்றும் ஒரு சுவிட்ச் கீ ஆகியவைகள் அடங்கும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏஐ நாய்ஸ் ரிடெக்ஷன் உபுடன் ப்ளூடூத் அழைப்பை ஆதரிக்கிறது மற்றும் மென்மையான செயல்திறனுக்காக டூயல் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. சுவாரசியமாக ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் குவிக் மெசேஜ் ரிப்ளைஸ், ஒரு ரிமோட் கேமரா ஷட்டர் மற்றும்பைண்ட் மை போன் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது இதய துடிப்பு கண்காணிப்பு, எஸ்பிஓ2 கண்காணிப்பு, தூக்க பகுப்பாய்வு, மன அழுத்த கண்காணிப்பு மற்றும் பெண்களுக்கான மாத விடாய் சுழற்சி கண்காணிப்பு போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

மேலும் இது 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஐபில்ஸ் (iPulse) ஆப் உடன் இணக்கத்தன்மையை கொண்டுள்ளது. இறுதியாக, இது நீடித்து உழைக்கும் தன்மைக்காக டிஸ்பிளேவில் ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பிரேம் மற்றும் சபையர் கிரிஸ்டல் கிளாஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது சாதாரண பயனர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இருவருக்கும் ஏற்றதாக உள்ளது.

ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை, விற்பனை மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் ஐடெல் யூனிகார்ன் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.1,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சை அமேசான் வழியாக வாங்கலாம். இது மீட்டிரைட் க்ரே, காப்பர் கோல்ட் மற்றும் அலுமினியம் சில்வர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒருவேளை இந்தியாவில் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வேறு ஸ்மார்ட் வாட்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அது ஒன்பிளஸ் வாட்ச் 3 மினி மாடல் ஆகத்தான் இருக்கும், ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் புதிய மினி வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான ஒரு லீக் போஸ்டர் வழியாக, ஒப்போ வாட்ச் எக்ஸ்2 (Oppo Watch X2) மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் மினி வேரியண்ட் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கிடைத்தது. தற்போது, மினி ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் இந்திய வெளியீடு (OnePlus Watch 3 Mini India Launch) நினைத்ததை விட விரைவில் நடக்கலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 3 மினி மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மினி வேரியண்ட் 43மிமீ அளவு (43mm size) கொண்ட மாடலாக இருக்கலாம் என்றும் இந்த புதிய மாடலில் 18மிமீ ஸ்ட்ராப் (18mm Strap) இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இதன் அம்சங்கள் 46மிமீ அளவில் அறிமுகமான ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3 46mm size) மாடலுடன் ஒற்றுப்போகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel Unicorn Max Smart Watch Launched in India For Rs 1999 Check Out Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X