Home
Gadgets

அதிருது itel இயர்பட்ஸ்.. கம்மி காசுக்கு.. 50 மணி நேர பிளேபேக் நேரம்.. ஸ்ட்ராங் Bass.. ஒரே டைமில் 2 Earbuds ..

ஐடெல் (itel) நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு இயர்பட்ஸ் (Earbuds) சாதனங்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்துள்ளது. 45 மணி நேர பிளேபேக் டைம் மற்றும் 50 மணி நேர பிளேபேக் டைம் நேரத்துடன் புதிய இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

அடிக்கடி இயர்பட்ஸ் சாதனத்தை சார்ஜ் (earbuds charging) போட வேண்டிய நிலையே வரக்கூடாது. 50 மணி நேர பிளேபேக் நேரம் (50 hours playback time) வேண்டும். புது டிஸைனுடன் ஸ்ட்ராங் பாஸ் (strong bass) உடன் TWS இயர்பட்ஸ்ஸாக (TWS earbuds) தான் இருக்க வேண்டும். கண்டிப்பாக காஸ்ட்லீயாக (costly) இருக்கவே கூடாது. ரேட்டும் (price rate) கம்மியாக தான் இருக்க வேண்டும்.

அதிருது itel இயர்பட்ஸ்.. கம்மி காசுக்கு.. 50 மணி நேர பிளேபேக் நேரம்..

ஐடெல் டி31 ப்ரோ மற்றும் ஐடெல் பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸ் (itel T31 Pro and itel Buds Ace 2 TWS earbuds):

இப்படி எங்கள் பல எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஒரு நல்ல இயர்பட்ஸ் சாதனம் இருந்தா சொல்லுங்க உடனே ஆர்டர் போடுறேன் என்று கூறும் மக்களுக்காகவே, ஐடெல் நிறுவனம் புதிதாக 2 இயர்பட்ஸ் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஐடெல் இயர்பட்ஸ் (itel earbuds) சாதனங்களில் முதல் மாடல் ஐடெல் டி31 ப்ரோ (itel T31 Pro TWS earbuds) பெயருடன் வெளிவந்துள்ளது.

மறுபுறம், இரண்டாவது மாடல் ஐடெல் பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸ் (itel Buds Ace 2 TWS earbuds) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயர்பட்ஸ் மாடல்களும் எஸ்தெடிக் டிசைன் (Aesthetic design) உடன் 13mm மற்றும் 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்களுடன் (Bass boost drivers) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தரமான ஸ்ட்ராங் பாஸ் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இந்த இயர்பட்ஸ்கள் சரியான தேர்வாக அமையும்.

இந்த இரண்டு இயர்பட்ஸ்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு T31 Pro சாதனம் 32dB வரையிலான ANC அனுபவத்தை வழங்குகிறது. இவை இரண்டும் 45ms லோ-லேடன்சி மற்றும் ஏஐ-இஎன்சி (AI-ENC) அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் இரைச்சல் இல்லாத மிக துல்லியமான வாய்ஸ் கால் அனுபவத்தை பயனர்கள் பெறமுடியும். இந்த இயர்பட்ஸ் சாதனங்கள் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி உடன் வருகிறது.

அதிருது itel இயர்பட்ஸ்.. கம்மி காசுக்கு.. 50 மணி நேர பிளேபேக் நேரம்..

50 மணி நேர பிளேபேக் நேரம்.. ஸ்ட்ராங் பாஸ் உடன் இந்த ஐடெல் இயர்பட்ஸ் விலை என்ன?

ஐடெல் டி31 ப்ரோ இயர்பட்ஸ் (itel T31 Pro TWS earbuds) சாதனம் 37mAh பேட்டரி உடன் 500mAh சார்ஜிங் கேஸ் பேட்டரியை வழங்குகிறது. அதேபோல், ஐடெல் பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸ் (itel Buds Ace 2 TWS earbuds) சாதனம் 30mAh பேட்டரி உடன் 500mAh சார்ஜிங் கேஸ் பேட்டரியை வழங்குகிறது. itel T31 Pro சாதனம் 45 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.

அதேபோல், itel Buds Ace 2 சாதனம் 50 மணி நேர பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இரண்டு இயர்பட்ஸ் மாடல்களும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 180 நிமிட பிளே நேரத்தை இந்த இயர்பட்ஸ்கள் வழங்குகிறது. இவை IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது.

இதன் விலை பற்றி பேசுகையில், itel T31 Pro சாதனம் க்ளோஸி சில்வர் நிறத்துடன் ரூ. 1,499 என்ற விலையுடன் வருகிறது. மறுபுறம், itel Buds Ace 2 சாதனம் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ஐவரி வைட் (Ivory White) நிறங்களில் ரூ. 1,199 என்ற விலையுடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel T31 Pro and itel Buds Ace 2 TWS Earbuds Launched 45 and 50 Hour Playback Time Under Rs 1499 and 1199 India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X