பக்கத்து தெரு அதிருமே.. 160W சவுண்ட், FREE வால்-மவுண்ட் கிட்.. ஆளுக்கு 1 வாங்கும் விலைக்கு Itel சவுண்ட்பார்!
திரைப்படங்கள், இசை மற்றும் கேமிங்கிற்காக மிகவும் ஆழ்ந்த ஒலி அனுபவத்தை (Immersive audio experience) விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு, ஐடெல் நிறுவனம் ஆனது இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார் (Itel New Soundbar) மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் இந்த புதிய சவுண்ட்பார் சீரிஸ் ஆனது, பரந்த அளவிலான நுகர்வோருக்கு எளிதில் கிடைக்கக்கூடிய விலை நிர்ணயத்தின் கீழ் இருக்கும் அதே வேளையில், சக்திவாய்ந்த சவுண்ட் அவுட்புட், நவீன கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாஸ் செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது.

புதிய ஐடெல் சவுண்ட்பார்களின் முக்கிய அம்சங்கள்: இந்த புதிய சீரீஸின் கீழ் ஐடெல் சவுண்ட்பார் 160வாட் ( itel Soundbar 160W) மற்றும் ஐடெல் சவுண்ட்பார் 120W (itel Soundbar 120W) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை இரண்டும் ஐடெல் நிறுவனத்தின் ஐதம்ப்எக்ஸ் பாஸ் தொழில்நுட்பத்தால் (iThumpX Bass technology) இயக்கப்படுகின்றன.
160W மாடல் ஆனது அறை முழுவதும் நிரப்பும் ஒலியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஹை -க்யூ குவாட்-ஸ்பீக்கர் அமைப்பை (Hi-Q quad-speaker setup) கொண்டுள்ளது, அதே நேரத்தில் 120W மாடல் ஆனது தெளிவான மற்றும் சமநிலையான ஒலி வெளியீட்டிற்காக டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) உடன் வருகிறது.
இந்த இரண்டு மாடல்களும் நியோடைமியம் மேக்னட் அடிப்படையிலான ஸ்பீக்கர் யூனிட்களை பயன்படுத்துகின்றன, இவை ஒலித் தரம் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்த சவுண்ட்பார்கள், மேம்படுத்தப்பட்ட ஒலி பிரிப்புக்காக ஒரு டிஎஸ்பி பிராசஸரையும், மேலும் ஆழ்ந்த கேட்கும் அனுபவத்திற்காக விர்ச்சுவல் 360-டிகிரி ஆடியோ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன.
கூடுதல் அம்சங்களை பொறுத்தவரை, எல்இடி டிஸ்ப்ளே, மேம்பட்ட விண்ட் பைப் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.3 இணைப்பு, ரிமோட் கண்ட்ரோல் ஆதரவு மற்றும் கன்டென்ட் வகையின் அடிப்படையில் ஆடியோ வெளியீட்டை கஸ்டமைஸ் செய்ய பயனர்களை அனுமதிக்கும் மூன்று EQ மோட்கள் ஆகியவைகள் உள்ளன
மேலும் இந்த சவுண்ட்பார்கள் TV ARC, ஆப்டிகல், AUX, USB மற்றும் SW அவுட் போர்ட்கள் உட்பட பல்வேறு இணைப்பு விருப்பங்களையும் ஆதரிக்கின்றன. இணக்கமான டிவி ரிமோட்களை பயன்படுத்தியும் இவற்றை இயக்க முடியும், இது பல வகையான கண்ட்ரோலர்களின் தேவையை குறைக்கிறது. ஐடெல் நிறுவனம் இந்த சவுண்ட்பார் பாக்ஸ் உடன் ஒரு வால்-மவுண்ட் கிட்டையும் சேர்த்து வழங்குகிறது மற்றும் இரண்டு மாடல்களுக்கும் 12 மாத உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
இந்தியாவில் ஐடெல் சவுண்ட்பார் 160W மற்றும் ஐடெல் சவுண்ட்பார் 120W மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐடெல் சவுண்ட்பார் 160W மாடலின் விலை ரூ.6,349 என்றும், ஐடெல் சவுண்ட்பார் 120W மாடலின் விலை ரூ.4,649 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
இந்த இரண்டு மாடல்களும் இப்போது இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கின்றன. விர்ச்சுவல் 360-டிகிரி ஒலி, டிஎஸ்பி அடிப்படையிலான ஆடியோ செயலாக்கம், பல இணைப்பு விருப்பங்கள் மற்றும் ஐதம்ப்எக்ஸ் பேஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன், இந்த புதிய சவுண்ட்பார்கள் வீட்டுப் பொழுதுபோக்கு அமைப்புகளுக்கான மலிவு விலை மேம்படுத்தல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications