Home
Gadgets

வீட்டுக்கு 4 ஆர்டர்.. ரூ.899 க்கு 30 மணிநேர பேட்டரி, 360 டிகிரி BASS, IPX5 ரேட்டிங், AI ANC.. எந்த மாடல்?

ஐடெல் (Itel) நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் (New Earbuds) மாடல் ஆக ஐடெல் எஸ்9 ஸ்டார் (Itel S9 Star) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது பெர்பார்மென்ஸ் (Performance), பேட்டரி (Battery) மற்றும் அன்றாட வசதி (Everyday convenience) ஆகியவைகளுக்கு இடையில் ஒரு நேர்த்தியான சமநிலையை வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் (Itel S9 Star specifications and features): ஐடெல் எஸ்9 ஸ்டார் இயர்பட்ஸ் ஆனது 10 மிமீ ட்ரைவர்களுடன் (10mm Drivers) பொருத்தப்பட்டுள்ளது. இது வலுவான, அதிவேக 360 டிகிரி பாஸ்-ஐ (360 Degree BASS) வழங்குவதோடு மட்டுமின்றி, மியூசிக் மற்றும் கால்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட ஆடியோ வெளியீட்டையும் (Refined audio output for music and calls) வழங்குகின்றன.

வீட்டுக்கு 4 ஆர்டர்.. ரூ.899 க்கு 30 மணிநேர பேட்டரி, 360 டிகிரி BASS!

தெளிவான உரையாடல்களுக்கு, இது பேக்கிரவுண்ட் நாய்ஸ்களை (Background Noices) அடக்க உதவும் ஏஐ என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷனை (AI Environmental Noise Cancellation - AI ENC) கொண்டுள்ளது. இது நெரிசலான சூழல்களில் கூட குரல் பரிமாற்றத்தை மிகவும் துல்லியமாக்குகிறது. இந்த அம்சங்கள் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய இரண்டிற்கும் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.

ஐபிஎக்ஸ்5 ரேட்டிங் நீர் மற்றும் வியர்வை எதிர்ப்புடன் (IPX5-rated water and sweat resistance) கட்டமைக்கப்பட்டுள்ள ஐடெல் எஸ்9 ஸ்டார் இயர்பட்ஸ் ஆனது உடற்பயிற்சிகளின்போது அல்லது பயணங்களின்போது மிகவும் எளிமையாக பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது நீண்ட கால பேட்டரி லைஃப் அனுபவத்தையும் (Long Battery Life Experience) வழங்குகிறது, இதில் இள்ள 400எம்ஏஎச் சார்ஜிங் கேஸ் (400mAh Charging Case) மற்றும் 28எம்ஏஎச் இயர்பட்ஸ் (28mAh Earbuds) ஆனது மொத்தம் 30 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை (Total 30 Hours Playback Time) வழங்குகிறது.

நிலையான வயர்லெஸ் இணைப்பிற்காக ஐடெல் எஸ்9 ஸ்டார் ஆனது ப்ளூடூத் 5.3 ஐ (Bluetooth 5.3 Connection) ஆதரிக்கிறது மற்றும் எளிதான செயல்பாட்டிற்கான டச் கண்ட்ரோல்களையும் (Touch Controls) கொன்டுள்ளது கூடுதல் வசதிக்காக ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது வாய்ஸ் ஆக்டிவேஷனையும் (Voice Activation) ஆதரிக்கிறது. இது பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு உதவுகிறது.

ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (itel S9 Star Price and Sale Details): இந்தியாவில் ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ரூ.899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இது இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை - பிளாக், மிட்நைட் ப்ளூ, பிரவுன் மற்றும் ஒயிட் (Black, Midnight Blue, Brown and White) ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

சமீபத்தில் ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது: ஐடெல் ஆல்பா எட்ஜ் (itel Alpha Edge) மற்றும் ஐடெல் ஆல்பா ஸ்டைல் (itel Alpha Style). இந்த இரண்டு மாடல்களுமே இலவச ஸ்னாப்-ஆன் ப்ரொடெக்ஷன் கேஸ் (Snap-on protective case) உடன் வருகின்றன.

இது அணிபவர்கள் ஒரு நேர்த்தியான டெய்லி டிசைனை வழங்குவதோடு சேர்த்து கடினமான வெளிப்புறத்திற்கு இடையிலான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. ஐடெல் ஆல்பா எட்ஜ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது லுரெக்ஸ் பிளாக் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய 2 கலர்களில் ரூ.1,499 க்கு வாங்க கிடைக்கிறது, ஐடெல் ஆல்பா ஸ்டைஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.1,799 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel S9 Star Wirless Earbuds 30 Hours Battery IPX5 Rating AI ANC Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X