Home
Gadgets

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட குவாட் மைக்குகள் மட்டுமல்லாமல், 50 மணி நேரங்களுக்கு பிளேபேக், ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல் மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட இந்த ஐடெல் ரிதம் எக்கோ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் போன்ற மாடல்களையும் ஐடெல் நிறுவனம் களமிறக்கி வருகிறது. இதில் இயர்பட்ஸ் மாடல்கள் பிரீமியமான ஆடியோ பீச்சர்களையும் பட்ஜெட்டில் கொடுத்து, தனியிடம் பிடித்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் ஐடெல் ரிதம் எக்கோ இயர்பட்ஸ் சேர்ந்துள்ளது.

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ்!

அவுட்டோர்களில் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் அனுபவத்தை கொடுக்கும்படி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்ஷலேஷன் கிடைக்கிறது. அதேபோல கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 45ms லோவ் லேட்டன்சி மோட் கிடைக்கிறது. ஆகவே, வீடியோ மற்றும் ஆடியோ சின்க் பக்காவாக எதிர்பார்க்கலாம். மேலும், கன்ட்ரோல்களுக்கு டச் சப்போர்ட் கொடுக்கிறது.

கர்வ்ட் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸ் இருக்கிறது. அதேபோல காம்பாக்ட் இயர்பட்ஸ் மாடலாகவும் இதை பார்க்க முடிகிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேட் ஃபினிஷிங் கொண்ட கேஸ் பட்ஜெட்டில் பிரீமியம் பீல் கொடுக்க வைக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் ரிதம் எக்கோ அம்சங்கள் (itel Rhythm Echo Specifications): இந்த எக்கோ இயர்பட்ஸ் மாடலில் 10 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களுக்கு ப்ளூடூத் 5.3 (Bluetooth: 5.3) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 மீட்டர்களுக்கு ரேஞ்ச் கிடைக்கும். வாய்ஸ் கால்களுக்கு குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது.

இந்த மைக்குகளில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோர்களில் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். பேக்கிரவுண்ட் நாய்ஸ்கள் குறைக்கப்பட்ட அவுட்புட் கிடைக்கும். கேமிங் பிரியர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் லோவ் லேட்டன்சி மோட் இதில் கிடைக்கிறது.

ஆகவே, வீடியோ மற்றும் ஆடியோவில் 45ms லோவ் லேட்டன்சி (Low Latency) பெற்று கொள்ளலாம். ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த ஐடெல் ரிதம் எக்கோ மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

இது டிராவல் செய்யும் நபர்களுக்கு பக்காவாக பேக்கப் கொடுக்கும். இந்த பட்ஜெட் விலையிலும் டிராக் சேஞ்ச், வால்யூம் மற்றும் கால் அணுகல்களுக்கு டச் கன்ட்ரோல் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐடெல் ரிதம் எக்கோ மாடலில் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. லுரெக்ஸ் பிளாக் (Lurex Black), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஒரு வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த இந்த ஐடெல் ரிதம் எக்கோ மாடலின் விலை ரூ.1,199ஆக இருக்கிறது. ஐடெல் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மற்ற தளங்களில் விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அப்போது, சலுகைகளும் கிடைக்கும். பட்ஜெட்டில் பக்கா இயர்பட்ஸ் வேண்டுமானால், இதை வாங்கி கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Rhythm Echo With 50 Hours Playback IPX4 Resistance Launched At Rs 1199 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X