அடிச்சான் பாரு ஐடெல்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ப்ளூடூத் காலிங் வாட்ச் அறிமுகம்! என்ன மாடல்? என்ன விலை?
பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை போலவே ஐடெல் நிறுவனமும் ஸ்மார்ட் கேஜெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆக ஐடெல் ஐகான் (Itel Icon Smart Watch) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
1.38 இன்ச் அளவிலான ஸ்பெரிக்கல் எச்டி ஸ்க்ரீன், ப்ளூடூத் காலிங் ஆதரவு, ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் நோட்டிபிக்கேஷன்ஸ்மற்றும் 100 க்கும் மேற்பட்ட கஸ்டம் வாட்ச் ஃபேஸ்கள் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் ஐடெல் ஐகான் ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஐடெல் ஐகான் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்: இந்த வாட்ச் 250எம்ஏஎச் பேட்டரியுடன் (250mAh Battery) வருகிறது, ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 12 நாட்கள் வரையிலான ஸ்டேண்ட்பை டைம்-ஐ (12 Days Standby Time) வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 240 x 240 ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 1.38-இன்ச் ஐபிஎஸ் ஸ்பெரிக்கல் எச்டி டிஸ்பிளேவை (Spherical HD Display) கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட் வாட்ச்சில ப்ளூடூத் வெர்ஷன் 5.3-க்கான ஆதரவு (Bluetooth Version 5.3 Support) உள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட் வாட்சில் ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) உடன் பெற்றுள்ளது. அறியாதோர்களுக்கு ஐபி ரேட்டிங் என்பது டஸ்ட் மற்றும் வாட்டர் ஃப்ரூப்பிற்கான (Dust and Water Proof) சான்றிதழ் ஆகும்.
ஐடெல் ஐகான் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 100 க்கும் மேற்பட்ட வாட்ஸ் பேஸ்களுடன் (100+ Watch Faces) வருகிறது. அதாவது அனுதினமும் உங்களுக்கு பிடித்த வாட்ச் பேஸ்களை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் வாட்சில் 100 ஸ்போர்ட்ஸ் மோட்களும் (100 Sports Mode) உள்ளது. இதனுடன் ஹார்ட் ரேட் (Heart Rate), எஸ்பிஓ2 (SpO2) மற்றும் ஸ்லீப் மானிட்டர்களை (Sleep Monitor) உள்ளடக்கிய ஒரு ஹெல்த் சூட்டும் (Health Suite) உள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் ஒருங்கிணைந்த வாய்ஸ் அசிஸ்டென்ட்டும் (Integrated voice assistant) உள்ளது. கூடவே இது ஸ்மார்ட் நோட்டிபிக்கேஷன்ஸ் (Smart Notifications) அம்சத்தையும் கொண்டுள்ளது. கூடுதலாக மியூசிக் பேக்கிரவுண்ட் (Music Background) மற்றும் கேமரா கண்ட்ரோல் (Camera Control) போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
ஐடெல் ஐகான் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை மற்றும் விற்பனை: ஐட்டம் ஐகான் ஸ்மார்ட் வாட்ச்சின் இந்திய விலை ரூ.1,599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் ஐடெல் டி1ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Itel T1Pro true wireless earbuds) அறிமுகமானது. இதன் விலை ரூ.849 ஆகும்.
இந்த புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஐடெல் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அரிஜீத் தலபத்ரா, "எங்கள் சமீபத்திய ஸ்மார்ட்வாட்சை (இந்திய) சந்தையில் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் ஐடெல் ஸ்மார்ட்வாட்ச்சின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்து வருகிறது. இயைத்து நம் நாட்டில் இந்த சாதனங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ஐகான் ஸ்மார்ட் வாட்ச் உடன், இந்திய நுகர்வோரின் இதயங்களைக் கைப்பற்றுவதையும், ஸ்மார்ட்வாட்ச் துறையில் முன்னணியில் உள்ள எங்கள் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம். ஸ்மார்ட் வாட்ச்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியாவின் அந்தஸ்துக்கு பங்களிக்க நாங்கள் காத்திருக்கிறோம் மற்றும் வியரபிள்ஸ் தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் சிறந்து விளங்கும் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்.


Click it and Unblock the Notifications








