மலிவு விலையில் டச் கண்ட்ரோல் வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.!
இந்தியாவில் ஐடெல் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் மாடலை செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐடெல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் மாடல் ஆனது பெரிய சவுண்ட் டிரைவர்கள் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இரண்டு இயர்பட்களிலும் சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர்போன்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி மற்றும் ப்ளூடூத் 5வசதி வழங்கப்பட்டு இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனங்களில் 13எம்எம் சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்படியும், காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வடிவமைப்புகொண்டிருக்கிறது இந்த புத்தம் புதிய சாதனங்கள். இத்துடன் 360 டிகிரி ஆடியோ அனுபவம் கிடைக்கிறது. இவை அழைப்புகளை ஏற்பது மற்றும் இசையை அட்ஜஸ்ட் செய்யும் வசதியை வழங்குகின்றன.

மேலும்; இவற்றில் 35எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இவற்றை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2.5மணி நேர மியூசிக் பிளேடைம் மற்றும் 3 மணி நேர டாக்டைம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர்போன்களுடன் 500எம்ஏஎச் பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ் வழங்கப்பட்டு உள்ளது,இது ஆறு முறை இயர்பட்களை சார்ஜ் செய்ய முடியும் என ஐடெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் ஐடிடபிள்யூ 60 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் விலை ரூ.1688-ஆக உளளது. மேலும் இந்த மாடல் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications