Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.999 போதும்.. 50 மணி நேர பேக்கப்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. டூயல் மைக்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை களமிறக்கி தனியிடம் பிடித்துள்ள ஐடெல் நிறுவனம், அதே பட்ஜெட் யுக்திகளை இயர்பட்களில் இறக்கி இருக்கிறது. ரூ.999 பட்ஜெட்டில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன், டூயல் மைக், டச் கன்ட்ரோல், குயிக்சார்ஜிங் பேட்டரி, ஐபிஎக்ஸ்5 வாட்டர் ப்ரூஃப் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி (itel Buds Ace ANC) விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஐடெல் இயர்பட்ஸின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் லுக்கில் கிரான்பெர்ரி ஜூஸ் (Cranberry Juice), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் கிடைக்கிறது. பட்களில் டூயல்-டோன் கலர்களில் மேட் பினிஷிங் கிடைக்கிறது. ஆகவே, டிசைனில் பிரீமியம் இயர்பட்ஸ்களை போலவே லுக் கொடுக்கிறது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.999 போதும்.. 50 மணி நேர பேக்கப்.. மாடல்?

ஐடெல் பட்ஸ் ஏஸ் அம்சங்கள் (itel Buds Ace Specifications): இந்த ஐடெல் மாடலில் 10எம்எம் டிரைவர்கள் வருகின்றன. இந்த பட்களில் ஏஐ என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) கொடுக்கும் டூயல் மைக்குகள் கிடைக்கின்றன. ஆகவே, வாய்ஸ் கால்கள் அவுட்டோரிலும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும். சைக்கிளிங், ஜாக்கிங் பிரியர்களுக்கு பக்காவா இருக்கும்.

ஏனென்றால், இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி மாடலில் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். இதுபோக டச் கன்ட்ரோல்களை இந்த பட்கள் கொடுக்கின்றன. இதன் மூலம் டிராக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். 40 எம்எம் லோவ் லேட்டன்சி சப்போர்ட் கிடைக்கிறது.

ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு லாக்-ப்ரீ ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் கிடைக்கும். வாய்ஸ் கால்களுக்கு மட்டுமல்லாமல், மியூசிக் அவுட்புட்டுக்கும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி மாடலின் ஒவ்வொரு பட்களிலும் 40mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. கேஸில் 500mAh பேட்டரி உள்ளது.

ஆகவே, 580mAh பேட்டரிக்கான அவுட்புட் பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு குயிக் சார்ஜிங் (Quick Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் உங்களுக்கு 3 மணி நேரத்துக்கு பிளேபேக் கொடுக்கும். அதுவே ஃபுல் சார்ஜ் செய்த பிறகு இந்த பேட்டரி மூலம் 50 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும்.

இது 2 நாட்களுக்கு மேல் கிடைப்பதாகவும். ஆகவே, பேட்டரி பேக்கப்பில் இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி மாடல் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த இயர்பட்ஸின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கிடைக்கிறது. ஆகவே, மொபைல், டேப்லெட் மற்றும் லேப்டாப் கனெக்டிவிட்டி ஃபாஸ்ட் அவுட்புட் கொடுக்கும்.

இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி மாடலானது, ஏற்கனவே மார்கெட்டில் வெளியாகி இருந்தும். ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை தொடங்கிவில்லை. இதனால் கம்மி பட்ஜெட்டில் இருந்தும் அதிக கஸ்டமர்கள் வாங்க முடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். வெறும் ரூ.999 பட்ஜெட்டில் டச் கன்ட்ரோல் முதல் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி, டூயல் மைக் மற்றும் 50 மணி நேர பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Buds Ace ANC With 50 Hours Playtime Sale From December 20 on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X