Home
Gadgets

அட்ராசக்கை.. இப்படியொரு இயர்பட்ஸ்க்கு தான் வெயிட்டிங்.. தெறி பறக்கும் itel-ன் இயர்பட்ஸ்.. ஆர்டர் குவியுது..

குறைந்த விலையில், 'அட்ராசக்கை செமயா ஒரு இயர்பட்ஸ் வாங்கிட்டோம்டா' என்று நீங்கள் ஃபீல் செய்யும் அளவிற்கு இந்திய மார்க்கெட்டில் ஒரு புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை தற்போது ஐடெல் (itel) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை ஐடெல் நிறுவனம் ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) என்ற பெயருடன் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்திய பயனர்களுக்கு பிடித்தமான ஒரு புதிய TWS இயர்பட்ஸ் சாதனமாக மாறப்போகிறது.

ஐடெல் (itel) நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அதன் ஐடெல் பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸ் (itel Buds Ace 2 Earbuds) என்ற சாதனத்தை அறிமுகம் செய்தது. இப்போது இந்த TWS இயர்பட்ஸ் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக நிறுவனம் அதன் புதிய ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

அட்ராசக்கை.. இப்படியொரு இயர்பட்ஸ்க்கு தான் வெயிட்டிங்.. தெறி பறக்குது

ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds):

இதன் விலை, இதன் சிறப்பம்சம் மற்றும் இது பற்றிய கூடுதல் முழு விபரங்கள் இதோ. இந்த புதிய ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனம் 10mm டிரைவ்ஸ் உடன் மிகவும் துடிப்பான ஆடியோ அனுபவத்தை அடர்த்தியான பாஸ் உடன் வழங்கி அசத்துகிறது. இது டூயல் மைக் ஏஐ ENC ஆதரவுடன் வருகிறது.

இந்த இயர்பட்ஸ் சாதனம் 25dB ANC ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்களுக்கு இரைச்சல் இல்லாத வாய்ஸ் கால்ஸ் அனுபவத்தை இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் வழங்குகிறது. இது டூயல் டோன் டிஸைனுடன் சென்சிடிவ் டச் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது. இது வொரு சிறந்த TWS இயர்பட்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனம் ப்ளூடூத் v5.3 ஆதரவுடன் மிகவும் ஸ்மூத்தான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது மிகவும் வேகமான பேரிங் ஆதரவுடன் உங்கள் ஸ்மார்ட்போனுடன் டக்டக்கென்று கனெக்ட் ஆகிறது. இதில் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது IPX5 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உடன் வருகிறது.

ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் விலை (itel Buds Ace ANC Earbuds Price):

ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனம் 60ms லோ-லேடன்சி மோட் உடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனம் 40mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி உடன் வருகிறது.

ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) டிவைஸ் மொத்தமாக 50 மணி நேரம் வரையிலான பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இந்த சாதனத்தை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரையிலான பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் இப்போது விற்பனையில் உள்ளது. ஆகையால், இதன் விலை விண்பரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐடெல் பட்ஸ் ஏஸ் ஏஎன்சி இயர்பட்ஸ் (itel Buds Ace ANC Earbuds) சாதனம் இப்போது கார்ன்பெரி ஜூஸ், வெள்ளை மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது இந்திய சந்தையில் ரூ.1399 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Buds Ace ANC TWS Earbuds Launched Rs 1399 In India With Up To 50 Hours Total Playtime
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X