Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. இந்தியாவில் இது முதல் முறை.. இலவச Protective case உடன் 2 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

சைனீஸ் பிராண்ட் ஆன ஐடெல் (itel) நிறுவனம் ஆனது பட்ஜெட் விலைவாசிகளை குறிவைத்து இந்திய சந்தையில் 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று - ஐடெல் ஆல்பா எட்ஜ் (itel Alpha Edge) மாடல். இன்னொன்று - ஐடெல் ஆல்பா ஸ்டைல் (itel Alpha Style) மாடல் ஆகும்.

இந்த இரண்டு மாடல்களிலும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்வாட்ச்களுடன் சேர்த்து இலவசமாக கிடைக்கும் ஸ்னாப்-ஆன் ப்ரொடெக்ஷன் கேஸ் (Snap-on protective case) தான். இது அணிபவர்கள் ஒரு நேர்த்தியான டெய்லி டிசைனை வழங்குவதோடு சேர்த்து கடினமான வெளிப்புறத்திற்கு இடையிலான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

இலவச Protective case உடன் 2 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

ஸ்மார்ட்வாட்ச் உடன் இப்படி ப்ரொடெக்டிவ் கேஸ் வருவது - இந்தியாவின் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் முதல் முறையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஐடெல் ஆல்பா எட்ஜ் மற்றும் ஐடெல் ஆல்பா ஸ்டைல் ஸ்மார்ட்வாட்ச்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:

ஐடெல் ஆல்பா எட்ஜ் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் மற்றும் விலை (itel Alpha Edge Specifications and Price in India): ஆல்பா எட்ஜ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 500 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் உடனான பெரிய 2.0-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது வெளிப்புறங்களில் (சூரியஒளி நிறைந்த இடங்களில்) ரீடிங்கை எளிதாக்குகிறது. இது ஐபிP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு, உடற்பயிற்சி, பயணம் மற்றும் சாதாரண பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது.

இந்த வாட்ச் ப்ளூடூத் காலிங், மெசேஜ் அலெர்ட் ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது, மேலும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், 150+ வாட்ச் பேஸ்கள் மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் எஸ்பிஓ2 அளவீடு போன்ற முக்கிய ஹெல்த் மானிட்டர் அம்சங்களையும் உள்ளடக்கியது.

300mAh பேட்டரியுடன் ஐடெல் ஆல்பா எட்ஜ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஸ்டேண்ட்பை மோட் இல் 15 நாட்கள் வரை நீடிக்கும். இது ஸ்டாப்வாட்ச், மியூசிக் கண்ட்ரோல், கால்குலேட்டர் மற்றும் வானிலை அப்டேட்கள் போன்ற நடைமுறை செயல்பாடுகளையும் வழங்கும். இந்த வாட்ச் லுரெக்ஸ் பிளாக் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய 2 கலர்களில் ரூ.1,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது இந்தியா முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும்

ஐடெல் ஆல்பா ஸ்டைல் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் மற்றும் விலை (itel Alpha Syyle Specifications and Price in India): சர்குலர் டயல் டிசைனை விரும்பும் பயனர்களுக்கு, ஆல்பா ஸ்டைல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.43-இன்ச் AMOLED டிஸ்பிளேவை வழங்குகிறது. இது 700 நிட்ஸ் ப்ரைட்னஸ், 466 × 466 ரெசல்யூஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது

இது ப்ளூடூத் 5.3 சிப்பால் இயக்கப்படுகிறது, இது பேட்டரி செயல்திறன் மற்றும் கால் தெளிவை மேம்படுத்துகிறது. இது ஆல்பா எட்ஜ் போன்ற அதே ஹெல்த் மற்றும் ஸ்போர்ட்ஸ் கண்காணிப்பு அம்சங்களை வழங்குகிறது, அதே போல் ஒரே மாதிரியான பேட்டரி திறன் மற்றும் ஸ்டேண்ட்-பை நேரத்தையும் வழங்குகிறது

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது மிட்நைட் ப்ளூ, லூரெக்ஸ் பிளாக், ரோஸ் கோல்ட் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் ஆகியவை 4 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் ஆல்பா ஸ்டைஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் இந்திய விலை நிர்ணயம் ரூ.1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel Alpha Edge Alpha Style Smartwatches with Free Protective case Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X