தம்பி போட்றா ஆர்டரை.. பெரிய டிஸ்பிளே.. கம்மி விலை.. ஆடம்பரமான தோற்றத்தில் itel ஸ்மார்ட்வாட்ச்.. என்ன விலை?
ஐடெல் (itel) நிறுவனம் சமீபத்தில் அதன் ஐடெல் A50 (itel A50) மற்றும் ஐடெல் A50C (itel A50C) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த பிறகு, இந்தியாவில் இப்போது மலிவு விலையில் 2 இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) என்ற பெயருடன் ரூ. 1500 விலைக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் அம்சம், விலை மற்றும் முழுவிபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) என்ற புதிய itel ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மிகமிக குறைந்த விலையில் 2'' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன், ப்ளூடூத் வாய்ஸ் காலிங், 100+ ஸ்போர்ட்ஸ் மோட், பலதரப்பட்ட ஸ்மார்ட் ஆப்ஷன்கள், கலர்புல் வாட்ச் பேஸ் ஆகியவற்றுடன் இந்திய சந்தைக்குள் தற்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆக வெளிவந்துள்ளது.

தம்பி போட்றா ஆர்டரை.. பெரிய டிஸ்பிளே.. கம்மி விலை Smartwatch:
இந்த புதிய ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் நிறுவனம் என்னென்ன அம்சங்களை வழங்கியுள்ளது என்று இப்போது பார்க்கலாம். இந்த புதிய ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் 2'' இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HD டிஸ்பிளேவாக 500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை பிரகாசமான விஷுவலை வழங்குகிறது.
ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2):
இந்த ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) சாதனம் 150 வாட்ச் பேஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 270mAh பேட்டரி உடன் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இந்த ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் (itel Smartwatch) டிவைஸ் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது. இதில் இன்பில்ட் மைக்ரோபோன் மற்றும் டயல் பேட் போன்ற ஆதரவுகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 24 மணி நேர ஹெல்த் மானிட்டரிங் அம்சத்தையும் வழங்குகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை itel நிறுவனம் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) சாதனம் IP சான்றிதழ் பெற்றது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பண்புகளை கொண்டுள்ளது. இது தவிர இந்த ஸ்மார்ட்வாட்சில் நிறுவனம் இன்னும் பல ஸ்மார்ட் அம்சங்களை வழங்கி அசத்தியுள்ளது.
ஐடெல் ஆல்பா 2 விலை (itel Alpha 2 Price):
இந்த புதிய ஐடெல் ஆல்பா 2 (itel Alpha 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஏஐ வாய்ஸ் அசிஸ்ட்டன்ஸ் (), போன் பைண்டிங் அம்சம், மெசேஜ் நோட்டிபிகேஷன் அம்சம் மற்றும் கேமரா கண்ட்ரோல் அம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இது இந்தியாவில் ரூ. 1499 விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இது ரோஸ் கோல்டு, ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








