மொரட்டு பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. eSIM கனெக்டிவிட்டி.. 505mAh பேட்டரி.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைக்கும்படி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஈசிம் கனெக்டிவிட்டி, ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார், ப்ளூஓஎஸ், 505mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரத்யேகமாக ப்ரொபஷனல் கோச் சப்போர்ட் மற்றும் பக்கா பில்ட் குவாலிட்டியில் ஐக்யூ வாட்ச் ஜிடி (iQOO WATCH GT) மாடல் களமிறங்கி இருக்கிறது. இந்த ஐக்யூ வாட்ச் ஜிடி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ வாட்ச் ஜிடி அம்சங்கள் (iQOO WATCH GT Specifications): இந்த ஐக்யூவில் 1.85 இன்ச் (390×450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (AOD) டிஸ்பிளே மாடலாகும். 2.5D கர்வ்ட் டிசைன் (Curved Design) கொண்டுள்ளது.

சென்சார்களை பார்க்கையில், ஆப்டிகல் ஹார்ட் ரேட் ( Optical Heart Rate) மற்றும் பிளட் ஆக்ஸிஜன் (Blood Oxygen) சென்சார் வருகிறது. மேலும், ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) வருகிறது.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங், ஸ்லீப் மானிட்டரிங், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் உள்ளிட்டவை வருகிறது. மேலும் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங், நாய்ஸ் டிடெக்சன் சப்போர்ட் உள்ளது. இதுபோக 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) மற்றும் ப்ரொபஷனல் கோச் (Professional Coach) சப்போர்ட் உள்ளது.
இந்த ஐக்யூ வாட்ச் ஜிடி மாடலில் ப்ளூஓஎஸ் (BlueOS) வருகிறது. ப்ளூடூத் வாய்ஸ் காலிங் சப்போர்ட் (Bluetooth Voice Calling Support) உள்ளது. ஆகவே, இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) மைக்ரோபோன் (Microphone) வருகிறது. இந்த மாடலில் ஈசிம் (eSIM) சப்போர்ட் உள்ளது. ஆகவே, எல்டிஇ (LTE) கனெக்டிவிட்டியை பயன்படுத்தலாம்.
மேலும், ப்ளூடூத் 5.3 எல்ஈ (Bluetooth 5.3 LE), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. இந்த மாடலில் 505mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 21 நாட்களுக்கு ப்ளூடூத் மோடில் பேக்கப் பெறலாம். ஈசிம் மோடில் 9 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஸ்மார்ட் விண்டோ (Smart Window), வாட்ச் பேஸ் வொர்க்சாப் (Watch Face Workshop) போன்ற ஏஐ பீச்சர்கள் வருகின்றன. ஸ்குவார் டயல் டிசைனில் (Square Dial Design) பிரீமியம் கலர்கள் கொண்டிருக்கிறது. பிளாக் (Black), ஸ்விஃப்ட் பிளாக் (Swift Black) மற்றும் லெதர் ஸ்ட்ராப் கொண்ட ஃபிளீட்டிங் பிளாக் (Fleeting Black) கலர்களில் கிடைக்கிறது.
இந்த கலர்களில் ப்ளூடூத் வேரியண்ட்டின் விலை ரூ.5,741 ஆக இருக்கிறது. அதேபோல ஈசிம் மற்றும் லெதர் வேரியண்ட்டின் விலை ரூ.10,343ஆகவும், ஈசிம் மற்றும் ரப்பர் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.10,343ஆகவும் இருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. வரும் ஜூலை 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய வேரியண்ட்டில் விலையில் மாற்றங்கள் இருக்கலாம். பக்கா பிரீமியம் பீச்சர்கள் மற்றும் லுக் மட்டுமல்லாமல், பில்ட் குவாலிட்டியும் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல் வேண்டுமானால், இந்த ஐக்யூ வாட்ச் ஜிடி மாடலுக்கு வெயிட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








