47 மணிநேர பேட்டரி.. 4 வகை ANC மோட்.. கம்மி பட்ஜெட்.. இப்படி ஒரு TWS Erabuds-க்கு தானே காத்திருந்தோம்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Plus) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, புதிய ஐக்யூ இயர்பட்ஸ் மாடல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அது ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர் 3 ப்ரோ (iQOO TWS Air 3 Pro) இயர்பட்ஸ் மாடலாகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:
ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்-ன் முக்கிய அம்சங்கள்:
- PU + PET ஹைப்ரிட் டயாபிராம்களுடன் கூடிய 12மிமீ ட்ரைவர்களை கொண்டுள்ளது
- ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் உடன் கூடிய ட்ரிபிள்-மைக் சிஸ்டம்; இது சுற்றுப்புற இரைச்சலை 50dB வரை குறைக்கிறது.

- மைக் சிஸ்டமில் FF, FB மற்றும் TALK மைக்குகள் உள்ளன
- ஒரு சிறப்பு எல்-வடிவ காற்றாலை குழாய் வெளிப்புற பயன்பாட்டின் போது காற்றின் இரைச்சலை குறைக்க உதவுகிறது. இது பேருந்துகள், சுரங்கப்பாதைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பல்வேறு சூழல்களுக்கு நல்ல நாய்ஸ் ரிடெக்ஷனை வழங்கும்
- ஒவ்வொரு இயர்பட் 3.8 கிராம் எடையும், ஒரே சார்ஜில் 9.5 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும்
- சார்ஜிங் கேஸை பயன்படுத்தி மொத்தம் 47 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்
- 10 நிமிட குவிக் சார்ஜ் ஆனது 2 மணிநேரம் வரை லிஸனிங் டைமை வழங்குகிறது.
- நான்கு ஏஎன்சி (ANC) மோட்கள் கிடைக்கின்றன: டிரான்ஸ்பெரன்சி, லைட், பேலன்ஸ்டு மற்றும் மேக்ஸ் நாய்ஸ் ரிடெக்ஷன்.
- விவோவின் கோல்டன் இயர்ஸ் ஆடியோ ஆய்வகத்தை பயன்படுத்தி இதன் சவுண்ட் ட்யூன் செய்யப்படுகிறது.
- ப்ளூடூத் 6.0 கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது
- SBC மற்றும் AAC கோடெக் ஆதரவு உடன் வருகிறது
- இந்த இயர்பட்ஸ் ஆடியோபுக் வாய்ஸ், ஹெவி பாஸ், கிளியர் ஆன வாய்ஸ்கள் மற்றும் தெளிவான ட்ரெபிள் ஆகியவற்றிற்கான முன்னமைக்கப்பட்ட ப்ரொபைல்களுடன் கூடிய டீப்எக்ஸ் 3.0 ஸ்டீரியோ விளைவுகளை ஆதரிக்கின்றன.
- இது ஸ்பேஷியல் ஆடியோ ஒரு 3டி கேட்கும் விளைவை உருவாக்குகிறது, மேலும் சவுண்ட்ஸ்டேஜை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கிறது.
- கேமிங்கிற்காக, இந்த இயர்பட்ஸ் ஆனது MOBA, FPS, ரேசிங் மற்றும் RPG உள்ளிட்ட கேம் வகையின் அடிப்படையில் மான்ஸ்டர் சவுண்ட் டியூனிங்கை வழங்குகின்றன
- இந்த இயர்பட்ஸ் எல்சிC3 ஆடியோ கோடெக்கை ஆதரிக்கின்றன
- ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களுடன் இணக்கமாக வேலை செய்யும்.
- டச் கண்ட்ரோல்கள் தனிப்பயனாக்கக்கூடியவையாக உள்ளது: இதன்கீழ் பிளே, பாஸ், டிராக் ஸ்கிப், கால் மேனேஜ்மென்ட் மற்றும் நாய்ஸ் கண்ட்ரோல் முறைகளை மாற்றுதல் ஆகியவற்றை கையாள முடியும்
- வாய்ஸ் அசிஸ்டன்ட் செயல்பாடுகளில் அழைப்பு மற்றும் செய்தி வாசிப்புகள், புகைப்படம் எடுத்தல், லாங் -வியர் நினைவூட்டல்கள் மற்றும் Find My Earbuds அம்சம் ஆகியவைகளை அணுகலாம்.
ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்-ன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சீனாவில் ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ் ஆனது 199 யுவானுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஐக்யூ இசட்10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து வாங்கும்போது தோராயமாக ரூ.2000 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஸ்டார் யெல்லோ மற்றும் டயமண்ட் ஒயிட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐக்யூ டிடபுள்யூஎஸ் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை, அதுகுறித்த தகவல் கிடைத்தால்.. உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








